மேகாலயா, திரிபுரா, நாகலாந்து மாநில தேர்தல் தேதி இன்று அறிவிப்பு

3 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இன்று மதியம் 12 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேகாலயா, திரிபுரா, நாகலாந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது.

இந்தியாவின் வடமாநிலங்களான மேகாலயா, திரிபுரா மற்றும் நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான காலம் முடிவடைய உள்ளது. இதனை தொடர்ந்து அந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தி புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும்.

மேகாலயாவில் காங்கிரஸ் ஆட்சியும், திரிபுராவில் கம்யூனிஸ்ட் ஆட்சியும், நாகலாந்தில், நாகலாந்து மக்கள் முன்னணி ஆட்சியும் நடந்து வருகிறது.

இந்த நிலையில், 3 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இன்று மதியம் 12 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்கின்றது.

×Close
×Close