Advertisment

வீட்டுக் காவலில் மெகபூபா முப்தி; காஷ்மீரில் இயல்புநிலை பற்றிய போலி வாக்குறுதிகள் அம்பலம் என விமர்சனம்

“ஆப்கானிஸ்தான் மக்களின் உரிமைகளுக்காக இந்திய அரசு கவலை தெரிவிக்கிறது. ஆனால், காஷ்மீர் மக்களுக்கு வேண்டுமென்றே உரிமைகளை மறுக்கிறது. நான் இன்று வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளேன், ஏனென்றால், காஷ்மீரில் நிலைமை சாதாரணமாக இல்லை என்று கூறுகிறார்கள்” என்று முஃப்தி ட்வீட் செய்துள்ளார்.

author-image
WebDesk
New Update
mehbooba mufti house arrest, mehbooba mufti says under house arrest, வீட்டுக்காவலில் மெகபூபா முப்தி, ஜம்மு காஷ்மீர், காஷ்மீர், இந்திய அரசு, jammu kashmir, goi, kashmir, pdp leader mehbooba mufti

மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும் முன்னாள் ஜம்மு - காஷ்மீர் முதல்வருமான மெகபூபா முப்தி செவ்வாய்க்கிழமை அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது இந்திய அரசாங்கத்தின் போலி வாக்குறுதிகளை அம்பலப்படுத்துகிறது என்று கூறினார். அரசு நிர்வாகத்தின் கருத்துப்படி, காஷ்மீரில் நிலைமை சாதாரணமாக இல்லாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

“ஆப்கானிஸ்தான் மக்களின் உரிமைகள் மீதான அக்கறையை இந்திய அரசாங்கம் வெளிப்படுத்துகிறது. ஆனால், காஷ்மீரிகளுக்கு உரிமைகள் வேண்டுமென்றே மறுக்கிறது. அரசு நிர்வாகத்தின் கருத்துப்படி, காஷ்மீரில் நிலைமை சாதாரணமாக இல்லாததால், நான் இன்று வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளேன். இது அவர்களின் இயல்பான போலி கோரிக்கைகளை அம்பலப்படுத்துகிறது” என்று மெகபூபா முப்தி ட்வீட் செய்துள்ளார்.

கடந்த புதன்கிழமை பிரிவினைவாத தீவிரவாதி சையது அலி ஷா ஜீலானியின் மரணத்திற்குப் பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பின்னர் முஃப்தி இந்த ட்வீட் வந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, பாகிஸ்தான் கொடியைக் கொண்டு ஜீலானியின் உடலை போர்த்தியதற்காகவும், அவரது மரணத்திற்குப் பிறகு தேச விரோத கோஷங்களை எழுப்பியதற்காகவும் எஃப்ஐஆர் பதிவு செய்ததற்காக மெகபூபா முப்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார். காஷ்மீரை திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றியதால், இப்போது இறந்தவர்கள் கூட காப்பாற்றப்படவில்லை. ஒரு குடும்பம் அவர்களின் விருப்பப்படி துக்கம் மற்றும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி இல்லை. உபா சட்டத்தின் கீழ் ஜீலானி சஹாப்பின் குடும்பத்தின் மீது இந்திய அரசாங்கம் வழக்குப் பதிவு செய்வது ஆழமாக வேரூன்றிய மூர்க்கத் தனத்தையும் இரக்கமற்ற தன்மையையும் காட்டுகிறது. இது புதிய இந்தியாவின் நயா காஷ்மீர் என்று பிடிபி தலைவர் மெகபூபா முப்தி ட்வீட் செய்துள்ளார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு செப்டம்பர் 2 ஆம் தேதி அளித்த பேட்டியில், ஜூன் 24ம் தேதி புதுடில்லியில் பிரதமருடன் அனைத்துக் கட்சி சந்திப்பு நிகழ்வில் இருந்து முன்னோக்கி நகரவிலை என்று மெகபூபா முப்தி கூறினார். மேலும், இந்த நடவடிக்கையில் அதே புகைப்படத்தின் சட்டகத்தில் காட்சியாக இருக்கிறார்கள் பெரிய நோக்கத்தை அளிக்கவில்லை என்று கூறினார்.

கூட்டத்தில் குறிப்பிட்ட நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டாலும் களத்தில் எதுவும் மாறவில்லை என்று அவர் கூறினார். “குறைந்தபட்சம் நீங்கள் சில நபர்களை / கைதிகளை விடுவிக்க முடிந்தால், அது முன்னேற்றத்துக்கு உதவும் என்று நான் கூறினேன்” என்று மெகபூப்பா முப்தி கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jammu And Kashmir Mehabooba Mufti
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment