Advertisment

’டெல்லி பறித்ததை திரும்பப் பெறுவோம்’ விடுதலையானார் மெஹபூபா முஃப்தி!

முப்தியின் மகள் இல்டிஜாவை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்பு கொண்டபோது, தனது தாயின் விடுதலையை அவர் உறுதிப்படுத்தினார். 

author-image
WebDesk
New Update
Mehbooba Mufti

மெஹபூபா முஃப்தி

கைது செய்யப்பட்டு பதினான்கு மாதங்களுக்குப் பிறகு, பொது பாதுகாப்புச் சட்டத்தின் (பிஎஸ்ஏ) கீழ் ஜம்மூ-காஷ்மீர் அரசாங்கம் தனது காவலை ரத்து செய்ததை அடுத்து ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டார்.

Advertisment

திறக்காத மண்டபத்துக்கு சொத்து வரியா? உயர் நீதிமன்றத்தில் ரஜினிகாந்த் மனு தாக்கல்

விடுவிக்கப்பட்ட பின்னர் ட்விட்டரில் வெளியிடப்பட்ட ஆடியோ செய்தியில், ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஆகஸ்ட் 5 ம் தேதி நடந்த “கொள்ளை மற்றும் அவமானத்தை” மறக்க முடியாது என்றும், யூனியன் பிரதேசம் மற்றும் வெளியே உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளையும் விடுவிக்கக் கோரியதாகவும் அவர் கூறினார்.

”புது டெல்லி சட்டவிரோதமாகவும், ஜனநாயக விரோதமாகவும், அரசியலமைப்பற்றதாகவும் நம்மிடமிருந்து பறித்ததை நாம் திரும்பப் பெற வேண்டும். இது தவிர, ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்யும் காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான போராட்டத்தை நாம் தொடர வேண்டும். இந்த பாதை எளிதானது அல்ல என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன், ஆனால் இந்த சாலையைக் கடக்க தைரியமும் உறுதியும் நமக்கு உதவும் என்று நான் நம்புகிறேன்” என்று அவர் அந்த ஆடியோ செய்தியில் கூறினார்.

தடுப்புக்காவல் ரத்து செய்யப்பட்டு விடுதலை ஆகியிருக்கும், முப்தி வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பேசுவார் எனத் தெரிகிறது. உள்துறை செயலாளர் ஷலீன் கப்ரா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவில், “ஜம்மு-காஷ்மீர் பொது பாதுகாப்புச் சட்டம், 1978 இன் பிரிவு 19 (1) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, திருமதி மெஹபூபா முப்தியின் தடுப்புக்காவல் உத்தரவை உடானடியாக ரத்து செய்கிறது” என்று தெரிவித்திருந்தார்.

CSK IS BACK : தலைதெறிக்க ஓடிய ஹைதராபாத் அணி…ரசிகர்கள் கொண்டாட்டம்!

முப்தியின் மகள் இல்டிஜாவை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்பு கொண்டபோது, தனது தாயின் விடுதலையை அவர் உறுதிப்படுத்தினார்.  “திருமதி முப்தியின் சட்டவிரோத தடுப்புக்காவல் இறுதியாக முடிவுக்கு வருவதால், இந்த கடினமான காலங்களில் என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். உங்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்… ”என்று அவர் தனது தாயின் ட்விட்டர் கைப்பிடியிலிருந்து ட்வீட் செய்துள்ளார்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Jammu And Kashmir Mehabooba Mufti
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment