பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கு - வீடியோவை வெளியிட்ட மெகுல் சோக்‌ஷி

வீடியோவில் வரும் தகவல்கள் ஆதாரமற்றவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை என்கிறது அமலாக்கத்துறை

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளி மெகுல் சோக்‌ஷி ஆண்ட்டிகுவா நாட்டில் இருந்து வீடியோ ஒன்றினை வெளியிட்டிருக்கிறார்.பஞ்சாப் வங்கி மோசடி வழக்கில் நீரவ் மோடி மற்றும் அவருடைய தாய்மாமன் மெகுல் சோக்‌ஷி இருவரையும் தேடி வருகிறது இண்டெர்போல் காவல் துறை. 13,600 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளி மெகுல் சோக்‌ஷி ஆவார்.

மோசடி தொடர்பான பிரச்சனைகள் வெளியில் வருவதற்கு முன்னமே, நீரவ் மோடி, அவருடைய மனைவி, மற்றும் சோக்‌ஷி இந்தியாவில் இருந்து வெளியேறிவிட்டார்கள்.

மெகுல் சோக்‌ஷி

மிக சமீபத்தில் நீரவ் மோடி மற்றும் சோக்‌ஷி இருவரையும் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் என்று அறிவித்து அவர்களைப் பிடிப்பதற்காக சர்வதேச காவல்துறையின் உதவியை நாடியது இந்திய புலனாய்வுத் துறை.

இந்த வழக்கு தொடர்பாக ஆண்ட்குவாவில் இருந்து வீடியோ ஒன்றினை வெளியிட்டிருக்கிறார் மெகுல் சோக்‌ஷி. ஆண்டிகுவாவில் இருந்து வெளியிடப்பட்டிருக்கும் அந்த வீடியோவில் உண்மையே இல்லை என்றும் ஆதாரம் அற்றதாகவும் இருக்கிறது என்று அமலாக்கத்துறை கூறியிருக்கிறது.

மெகுல் சோக்‌ஷி தன்னுடைய வக்கில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறிய வீடியோவினை தனியார் பத்திரிக்கை நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளார்.

தன்னுடைய பாஸ்போர்டை முடக்கி இந்திய அரசு முடக்கி வைத்துள்ளதால் என்னால் எங்கும் நகர இயலவில்லை என்று கூறியிருக்கிறார் அவர். மேலும் இது தொடர்பாக பிப்ரவரி மாதம் பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து பாஸ்போர்ட் முடக்கப்பட்டதிற்கான தகவல் ஒன்று மின்னஞ்சல் மூலம் தனக்கு கிடைக்கப் பெற்றது என்றும் அதனை நீக்கி உத்தரவிட வேண்டும் என்று மெகுல் பதில் கூறியதாகவும் சோக்‌ஷி அந்த வீடியோவில் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் எதற்காக தன்னுடைய பாஸ்போர்ட் முடக்கப்பட்டது என்றும் தகவல் எனக்கு அளிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார் அவர். ஆனால் அவர் கூறிய கருத்துகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்று மறுப்பு தெரிவித்திருக்கிறது அமலாக்கத்துறை.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close