Shamika Ravi tweets We are faced with a structural slowdown: இந்தியாவில் பொருளாதா மந்தநிலை நிலவுவதாகக் கூறுவது தவறு என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய நிலையில், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் ஷாமிகா ரவி, இந்தியாவில் பொருளாதார தேக்க நிலை நிலவுவதாகக் கூறியிருப்பது தெரியவந்துள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் பொருளாதார நிலை சிறப்பாகவே உள்ளது என்றும் இந்தியாவில் பொருளாதார மந்த நிலை நிலவுகிறது என்று கூறுவது தவறானது என்று கூறினார்.
முன்னதாக நேற்று பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் ஷாமிகா ரவி, தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்திய பொருளாதார கட்டமைப்பு மந்த நிலையை நாங்கள் எதிர்கொண்டு வருகிறோம். தற்போதய தேக்க நிலையை சமாளிக்க, அனைத்து அமைச்சகங்களுக்கும் இலக்கு நிர்ணயித்து தேசிய அளவிலான வளர்ச்சி திட்டத்தை வகுக்க வேண்டும் என்று ஷாமிகா ரவி குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் பொருளாதாரத்தில் பெரிய சீர்திருத்தங்கள் வேண்டும் என்றும் பொருளாதாரத்தை நிதி அமைச்சகத்திடம் மட்டும் விடுவது என்பது ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை கணக்கு துறையிடம் கொடுப்பது போல உள்ளது என்று தெரிவித்திருந்தார்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புக்குப் பிறகு, ஷாமிகா ரவி டுவிட்டர் பகக்த்தில் டக்டர் விஜய் சௌதாய்வாலே என்பவர் ஷாமிகா ரவி நிதி அமைச்சகத்துக்கு எதிரான அவதூறுகளை திரும்ப பெற்றுக்கொள்கிறீகளா? என்று கேட்டுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள ஷாமிகா ரவி, “நான் செய்வேன்(திரும்ப பெற்றுக்கொள்வேன்). உண்மையில் அடுத்த 2 வாரங்களில் அறிவிப்புகள் மற்றும் பல வாக்குறுதியால் நான் ஈர்க்கப்பட்டேன்! நான் நிதி அமைச்சின் வரி பிரிவில் ஒருநாள் இருந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.