Advertisment

தலைவர்கள் நினைவுச் சின்னம்: வரலாறு, புவியியல் மற்றும் அரசியல்

காந்தி, நேரு முதல் வி.பி சிங் மற்றும் நரசிம்ம ராவ் வரை இறுதிச் சடங்கு மற்றும் நினைவிடம் அமைக்கும் இடம் அப்போது அந்த நேரத்தில் யார் அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பதை பொறுத்து உள்ளது.

author-image
WebDesk
New Update
Raj Ghat

சஞ்சய் காந்திக்கு டெல்லியில் ஒரு நினைவகம் உள்ளது, அதே சமயம் முன்னாள் பிரதமர் விபி சிங்குக்கு "இந்தியாவில் எங்கும்" நினைவிடம் இல்லை.

Advertisment

டிசம்பர் 26 அன்று காலமான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இறுதி அஞ்சலி, நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்குவது குறித்து காங்கிரஸும் பாஜகவும் சண்டையிட்டன. நினைவிடம் அமைக்கும் இடம் என்பது அப்போது அந்த நேரத்தில் யார் அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பதை பொறுத்து உள்ளது. 

சிங்கின் தகனம் பொது மக்கள் நடமாட்டம் உள்ள நிகம்போத் காட்டில் நடத்தப்பட்டது.  இது 
"இந்தியாவின் முதல் சீக்கியப் பிரதமருக்கு நடந்த அவமானம்" என்று காங்கிரஸ் கூறியுள்ளது. 

அதே நேரம் நரேந்திர மோடி அரசாங்கம் இந்திய பொருளாதாரத்தை உயர்திய  கலைஞரைக் கவுரவிக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகக் கூறியுள்ளது.  

Advertisment
Advertisement

ஆதாரங்களின்படி, முதலில் நினைவிடம் அமைக்க ஒரு அறக்கட்டளை உருவாக்கப்படும், இதில் காங்கிரஸ் மற்றும் அரசாங்கத்தின் உறுப்பினர்கள் இடம்பெறுவர். அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து, அறக்கட்டளை நினைவிடத்திற்கான இடத்தை அடையாளம் காணும். 

சிங்கின் நினைவிடம் சஞ்சய் காந்தி நினைவிடம், ஜவஹர்லால் நேருவின் நினைவிடம், சாந்தி வேனில் அமைக்கப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. மறைந்த தலைவர்களுக்கான நினைவிட வளாகமான ராஷ்டிரிய ஸ்மிருதி ஸ்தல் மற்றும் முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் நினைவிடத்தை வைத்திருக்கும் கிசான் காட் ஆகியவை மற்ற ஆப்ஷன்களாக பேசப்படுகின்றன.

டெல்லியில் யமுனை ஆற்றுக்குப் பக்கத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ் காட், மற்ற தலைவர்கள் நினைவிடம் அமைப்பதற்கான டெம்ப்ளேட்டை வழங்கியது.  

ஜனவரி 1948 இல் காந்தி படுகொலை செய்யப்பட்ட இடத்தை ஒரு கருப்பு மார்பிள் ஸ்லாப் குறிக்கிறது. நேரு இறந்தபோது, ​​மே 1964 இல், ராஜ்காட்டை ஒட்டிய இடம் அவரது இறுதி சடங்குகளுக்காகவும் சாந்தி வான் என்று பெயரிடப்பட்ட அவரது நினைவிடத்திற்காகவும் ஒதுக்கப்பட்டது.

1964 முதல் 1966 வரை குறுகிய காலத்தில் இருந்த இரண்டாவது பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி, ராஜ் காட் அருகே விஜய் காட் என்ற பெயரில் நினைவிடத்தைப் பெற்றார். 

நேரு மற்றும் சாஸ்திரி இருவரின் எதிர்பாராத மரணத்திற்குப் பிறகு இடைக்காலப் பிரதமராகப் பணியாற்றிய குல்சாரிலால் நந்தாவுக்கு, அகமதாபாத்தில் அபய் காட் என்ற பெயரில் ஒரு நினைவிடம் உள்ளது. அவர் இறந்த இடத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டது. 

கடைசியாக 1971 இல் பொதுப் பதவியில் இருந்த நந்தா, 27 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜனவரி 1998 இல் இறந்தார். அந்த நேரத்தில் ஐ.கே குஜ்ரால் தலைமையிலான அரசாங்கம் வீழ்ச்சியடைந்து, பொதுத் தேர்தல் நடந்தது.

அகமதாபாத்தில் நாராயண் காட் என்றழைக்கப்படும் மொரார்ஜி தேசாய் நினைவிடமும் உள்ளது. குஜராத்தைச் சேர்ந்த தேசாய், மத்தியில் முதல் காங்கிரஸ் அல்லாத அரசாங்கத்திற்கு தலைமை தாங்கினார்.

ஜனதா கட்சித் தலைவர், எமர்ஜென்சிக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் இந்திரா காந்தியை வீழ்த்தி பிரதமராக பதவியேற்றார். 1977 முதல் 1979 வரை பதவி வகித்தார். அவர் 1995 இல் இறந்தார். அப்போது பி.வி நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் மத்தியில் ஆட்சியில் இருந்தது.

தேசாய்க்குப் பதிலாக காங்கிரஸின் ஆதரவுடன் பிரதமராக பதவியேற்ற சரண் சிங், ஜூலை 1979 முதல் ஜனவரி 1980 வரை மட்டுமே பணியாற்றினார், மே 1987 இல் அவர் இறந்தபோது ராஜ் காட் அருகே தகனம் செய்யும் இடத்தையும் பெற்றார். அந்த இடம் கிசான் காட் என்று நியமிக்கப்பட்டது. அவர் இறக்கும் போது ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி இருந்தது.

ஆங்கிலத்தில் படிக்க:    Memorials for leaders: The history, geography and politics

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment