மாதவிடாய் விடுமுறை, பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளுக்கு வழிவகுக்கும், என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மாநிலங்களவையில் புதன்கிழமை தெரிவித்தார்.
மாதவிடாய் விடுப்புக்கான சட்டத்தை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கிறதா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
‘இன்றைய நிலையில் பெண்கள் அதிகளவிலான பொருளாதார வாய்ப்புகளைத் தேர்வு செய்கிறார்கள். நான் இதில் எனது தனிப்பட்ட பார்வையை மட்டும் சொல்கிறேன்.
மாதவிடாய் குறித்து குறிப்பிட்ட கண்ணோட்டம் இருப்பதால் பெண்களுக்கு சம வாய்ப்பு மறுக்கப்படும் பிரச்சினைகளை நாம் முன்வைக்கக்கூடாது.
மாதவிடாய் மற்றும் மாதவிடாய் சுழற்சி என்பது ஒரு குறைபாடு அல்ல. அது பெண்களின் வாழ்வில் இயல்பானது, மாதவிடாயை சந்திக்கும் ஒரு பெண்ணாகவே இதை கூறுகிறேன். குறைந்த அளவிலான பெண்களே கடுமையான மாதவிடாய் வலியால் பாதிக்கப்படுகிறார்கள். இவை பெரும்பாலும் மருந்துகள் மூலம் சரி செய்யக்கூடியவையே.
பெண்களுக்கு பணியிடங்களில் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்குவது தேவையற்றது’, என்று அவர் கூறினார்.
ராஷ்டிரிய ஜனதா தள எம்.பி மனோஜ் குமார் ஜா, பெண் ஊழியர்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விடுப்புகளை வழங்குவதற்கு முதலாளிகளுக்கு கட்டாய ஏற்பாடுகளை செய்வதற்கு அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கை எடுத்திருக்கிறதா என்று ஒரு துணைக் கேள்வியில் கேட்டிருந்தார்.
முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ஆட்சியில் பீகார் மாநிலம் தான் முதன்முதலில் மாதவிடாய் விடுப்புக் கொள்கையை அறிமுகப்படுத்தியது, என்று ஜா கூறினார்.
சானிட்டரி நாப்கின்களில் பயன்படுத்தப்படும் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சி எடுக்கிறதா, என்றும் அவர் கேட்டார்.
சுவிதா சானிடரி நாப்கின்கள் பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஔஷதி பரியோஜனா என்ற மலிவு விலை மருந்து திட்டத்தின் கீழ் 1 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
Read in English: Menstrual leave could lead to discrimination against women: Irani
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“