#MeToo விவகாரம் எம்.ஜே. அக்பர் மீது குற்றச்சாட்டுகள் : மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே அக்பர் மீது ஊடகவியலாளர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார்கள்.
இது குறித்து மத்திய அமைச்சர் ஸ்மித்ரி இரானியிடம் கேள்வி கேட்ட போது, இந்த கேள்விக்கான பதிலை எம்.ஜே அக்பர் தான் கூற வேண்டும். இது குறித்து கருத்து கூற என்னால் இயலாது. ஆனால் குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் பெண்கள் குறித்த கருத்தினை அவ்வளவு எளிதாக புறந்தள்ளிவிடவும் இயலாது என்று அவர் கூறியிருக்கிறார்.
#MeToo விவகாரம் எம்.ஜே. அக்பர் மீது குற்றச்சாட்டுகள்
இந்தியாவில் ஊடகத்துறை மற்றும் திரைப்பட துறையில் நடைபெறும் பாலியல் வன்முறைகள் மற்றும் சீண்டல்கள் குறித்து கடந்த இரண்டு வாரங்களாக #MeToo என்ற ஹேஷ்டேக் பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. புதன் கிழமை இரவு வரை ஆறு ஊடகவியலாளர்கள் எம்.ஜே. அக்பர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருக்கிறார்கள். அது தொடர்பான கட்டுரையை படிக்க
அதன் பின்னர் கஜாலா வபாப் என்ற ஊடகவியலாளர் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். கஜாலாவின் விருப்பமின்மையைத் தொடர்ந்தும் கஜாலாவை தேவையில்லாமல் சீண்டுவது, முத்தம் கொடுக்க முயல்வது போன்ற சில தகாத நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார் எம்.ஜே. அக்பர் என தன்னுடைய அனுபவத்தை கூறியிருக்கிறார்.
தற்போது வணிகம் தொடர்பான ஒரு மாநாட்டிற்காக நைஜீரியா சென்றிருக்கும் எம்.ஜே. அக்பரிடத்தில் இருந்து இந்த மீடு விவகாரம் குறித்து எந்த விதமான கருத்தும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அக்பர் இந்த குற்றச்சாட்டுகளுக்கு தக்க பதில் தர வேண்டும் இல்லையென்றால் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என காங்கிரஸ் சார்பில் புகார்கள் முன் வைக்கப்பட்ட வண்ணம் இருக்கிறது. எம்.ஜே. அக்பர் விவகாரம் குறித்து பேசும் பாஜக பெண் அமைச்சர்கள் தொடர்பான கட்டுரையைப் படிக்க