MeTooUrbanNaxal என்று ட்விட்டரையும் பேஸ்புக்கையும் எகிற வைத்த நெட்டிசன்கள். நேற்று முன்தினம் ( 28/08/2018 ) ஐந்து முக்கியமான நகரங்களில் இருந்து மிகவும் முக்கியமான சமூக செயற்பாட்டாளர்களை கைத்ய் செய்தனர் புனே காவல்துறையினர்.
மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பில் உள்ளவர்கள் என்றும், பீமா கோரேகான் வன்முறை நிகழ்விற்கு காரணமானவர்கள் என்றும், நரேந்திர மோடியை கொலை செய்யத் திட்டமிட உதவியவர்கள் என்றும் அவர்களை கைது செய்தனர்.
MeTooUrbanNaxal என்ற ஹேஷ்டேக்
கைது செய்பட்ட சுதா பரத்வாஜ், அருண் பெரைரா, வரவர ராவ், கௌதம் நவ்லகா, மற்றும் வெர்ணோன் ஆகியோர்கள் இடதுசாரி சிந்தனைகள் உள்ள படைப்பாளிகள், பேராசிரியர்கள், மற்றும் சமூக சிந்தனையாளர்கள். இவர்களின் கைது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரிலும், முகநூலிலும் MeTooUrbanNaxal என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இந்த கைது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவு செய்யப்பட்ட MeTooUrbanNaxal பதிவுகள் இதோ...
இப்படியெல்லாம் முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் #MeTooUrbanNaxel என ஹேஷ்டேக்கினைப் போட்டு மகராஷ்ட்ரா காவல்துறையினரையும், ஆளும் கட்சியில் நிலவும் பாரபட்சத்தினையும் தாளித்துவிட்டார்கள் இணையதளவாசிகள்..