மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு(MGNREGS) இன் கீழ் சாதி அடிப்படையிலான ஊதியம் வழங்குவதை திரும்பப் பெறவும், பயனாளிகளை சாதி அடிப்படையில் பிரிக்காமல் ஒரே நிதி பரிமாற்ற ஆணையை (FTO) மீட்டெடுக்கவும், நாடாளுமன்ற நிலைக்குழு’ மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்திடம் கேட்டுள்ளது.
இதுதொடர்பாக சிவசேனா உறுப்பினர் பிரதாப்ராவ் ஜாதவ் தலைமையிலான குழு கூறியது:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பான மானியங்களுக்கான 2022-23 கோரிக்கைகளை பரிசோதித்தபோது’ சாதியின் அடிப்படையில், அதாவது முன்னுரிமை வரிசையில், எஸ்சி/எஸ்டி தொடங்கி மற்றவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் திடுக்கிடும் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
“அதை கண்டு கமிட்டி வியப்படைந்தது. அத்தகைய நடைமுறையைப் பயன்படுத்துவது எந்த விவேகத்தையும் மிஞ்சும்" என்று புதன்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை கூறுகிறது.
"மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், ’MGNREG சட்டம், 2005’ சட்ட மூலத்திலிருந்து உருவாக்கப்பட்டது. இத்தகைய அபத்தம் சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. இது அனைத்து MGNREGA பயனாளிகளையும் சமமாக நடத்துவதற்கான அடிப்படைக் கொள்கைகளில் இருந்து விலகி, கடுமையான விமர்சனங்களுக்கு அழைப்பு விடுக்கிறது.
"மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பல்வேறு சமூகப் பிரிவுகளில் உள்ள பயனாளிகளுக்கு பொதுவான ஒன்று மட்டுமே உள்ளது, அவர்கள் ஏழைகளாகவும், ஆதரவற்றவர்களாகவும் உள்ளனர். MGNREGA அவர்கள் உயிர்வாழ்வதற்கான அடிப்படை ஆதாரத்தைப் பார்க்க வேண்டும்.
சாதியின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு முன்னுரிமை அளிக்கும் அத்தகைய கட்டண முறையை உருவாக்குவது, MGNREGA இன் பயனாளிகளிடையே வெறுப்பை உண்டாக்கி பிளவை உருவாக்கும்.
எனவே "இத்தகைய மோசமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஜாதியின் அடிப்படையில் எந்தவிதமான பிரிவினையும் இல்லாமல் ஒரே நிதி பரிமாற்ற ஆணையை உருவாக்கும் முந்தைய வழிமுறையை மீட்டெடுக்க கமிட்டி ஒருமனதாக DoRD ஐ பரிந்துரைக்கிறது” என்று அந்த அறிக்கை கூறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“