முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிகாரப்பூர்வ பங்களாவை புனரமைத்ததில் நடந்த முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் குறித்து சிறப்பு தணிக்கை நடத்துமாறு, துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பரிந்துரை செய்தார்.
இதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சகம் (எம்ஹெச்ஏ) இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளரை (சிஏஜி) இது குறித்து விசாரிக்க கேட்டுக் கொண்டுள்ளது.
முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை புனரமைத்ததில் நிதி முறைகேடுகளை சுட்டிக்காட்டி துணை நிலை ஆளுனர் செயலகம் மே24ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தது.
அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக தோல்வி அடைய இருப்பதால் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கிறது எனத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பொதுப்பணித் துறை மற்றும் கட்டட விதிகளின்படி கட்டிடத் திட்டங்களுக்கு கட்டாய அனுமதி பெறவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், கட்டுமானப் பணிகளுக்கான ஆரம்பச் செலவு ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரை இருந்ததாகவும், பின்னர் 53 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை விமர்சித்த ஆம் ஆத்மி, “இது தொடர் தோல்வி அளித்த விரக்தியின் வெளிப்பாடு” எனத் தெரிவித்துள்ளது. மேலும் பழிவாங்கல் நடவடிக்கை என்றும் கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“