அதிகப்படியான ஆயுதப் படைகள், கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றும் தீவிரவாதக் குழுக்களின் களப் பணியாளர்கள் (over-ground workers) மீதான கடும் அடக்குமுறைகள் ஆகியவற்றின் காரணமாக 2019 முதல் ஜம்மு-காஷ்மீரில் கல் வீச்சு சம்பவங்கள் பெரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளன.
உள்துறை அமைச்சகத்திடம் உள்ள தரவுகளின்படி, 2019-ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தை ஒப்பிடுகையில் 2021 ஜனவரி முதல் ஜூலை வரையிலான கல் எறிதல் சம்பவங்கள் கிட்டத்தட்ட 88 சதவிகிதம் குறைந்துள்ளன. இதுபோன்ற சம்பவங்களில் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்பட்ட காயங்கள் முறையே 93 சதவீதத்திலிருந்து 84 சதவீதமாக குறைந்துள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2019 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை ஜம்மு & காஷ்மீர் பள்ளத்தாக்கில் 618 கல் வீச்சு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் இந்த எண்ணிக்கை 2020 ல் அதே காலகட்டத்தில் 222 ஆகவும் 2021 இல் வெறும் 76 ஆகவும் குறைந்துள்ளது. இந்த சம்பவங்களில் பாதுகாப்புப் படையினரின் காயங்களும் 2019 இல் 64 லிருந்து 2021 இல் வெறும் 10 ஆக குறைந்துள்ளது.
பெல்லட் துப்பாக்கிகள் மற்றும் தடியடி சார்ஜ் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்ட காயங்களிலும் அதிக வீழ்ச்சி காணப்பட்டது. 2019 இல் 339 லிருந்து இந்த ஆண்டு தற்போது வரை 25 மட்டுமே.
இந்த காலகட்டத்தில் தீவிரவாத குழுக்களின் களப் பணியாளர்களின் கைது அதிகரித்துள்ளது. 2019 ல் 82 ல் இருந்து இந்த ஆண்டு 178 ஆக அதிகரித்துள்ளது.
ஆகஸ்ட் 5, 2019 அன்று, ஜம்மு -காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது மற்றும் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இந்த முடிவுக்கு முன்னதாக காஷ்மீரில் மத்திய ஆயுதப்படை போலீஸ் படையினர் (சிஏபிஎஃப்) அதிகப்படியாக குவிக்கப்பட்டனர். மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது மற்றும் அனைத்து முக்கிய அரசியல் தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். பிரிவு முடிவுகளுக்குப் பிறகு, மொபைல் தொலைபேசி சேவை 72 நாட்களுக்கு இப்பகுதியில் நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 4 ஜி இணைய சேவை இந்த ஆண்டு பிப்ரவரியில் 18 மாதங்களுக்குப் பிறகு மீட்டமைக்கப்பட்டது. சில படைகள் திரும்பப் பெறப்பட்டாலும், இப்பகுதியில் தொடர்ந்து பலத்த பாதுகாப்புப் படையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் சமீபத்தில் கல் எறிதலில் ஈடுபட்டவர்களுக்கு பாஸ்போர்ட் மற்றும் அரசு வேலைகளுக்கு காவல்துறையினரின் பாதுகாப்பு அனுமதி கிடைக்காது என்று உத்தரவு பிறப்பித்தது.
“பாதுகாப்பு படை முன்னிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் தீவிரவாத அமைப்புகள் மற்றும் அவர்களின் களப் பணியாளர்கள் மீதான ஒடுக்குமுறை ஆகியவை சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனையில் நல்ல முடிவுகளை அளித்துள்ளது. சமீபத்திய சுற்றறிக்கை அந்த அழுத்தத்தைத் தக்கவைப்பதற்கான ஒரு முயற்சி “என்று ஜம்மு -காஷ்மீர் அதிகாரி ஒருவர் கூறினார்.
பிரிவினைவாதத் தலைவர்கள் மீது என்ஐஏ அடக்குமுறையை கையாண்டதோடு, ஏஜென்சியின் குற்றப்பத்திரிகையில் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், வட்டாரங்கள் தெரிவித்தன. “இந்த தலைவர்கள் உட்பட, கல் வீச்சு சம்பவங்களில் ஈடுபட்ட அனைவரும், ஜம்மு காஷ்மீர் பிரிவு முடிவு அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 5 முதல், பல்வேறு காலங்களில் டெல்லி மற்றும் ஆக்ராவில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது சட்டத்தின் மீது கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது … கொரோனா தொற்றும் என்ற பயமும் குறிப்பிடத்தக்க காலத்திற்கு வீதிகளுக்கு வருவதில் மக்களை விலக்கி வைத்துள்ளது., ”என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.
எவ்வாறாயினும், பாதுகாப்பு நிறுவன வட்டாரங்கள் காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு நீடித்த தீர்வு என்று அழைப்பதில் எச்சரிக்கையாக இருந்தன. “தடியால் அடையக்கூடிய அளவுக்கு மட்டுமே உள்ளது. குறைந்தபட்சம், நீண்ட காலமாக இல்லை. எனவே பொதுமக்கள் தொடர்பான பிரச்சினைகளில் அரசியல் ஈடுபாடு ஏற்படுவது அவசியம் மற்றும் அவர்களின் அச்சம் ஒரு சார்பு நிர்வாகத்தால் அகற்றப்படுகிறது. இது சம்பந்தமாக, ஜம்மு & காஷ்மீரின் முக்கிய அரசியல் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கை முக்கியமானது. இந்த செயல்முறை என்ன வழங்க முடியும் என்பதைப் பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் நிறைய இருக்கும், ”என்று ஒரு மூத்த பாதுகாப்பு நிறுவன அதிகாரி கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 24 அன்று ஜம்மு -காஷ்மீரில் உள்ள அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து, மாநிலத்தில் தேர்தலை நடத்தும் எல்லை நிர்ணயப் பயிற்சியில் பங்கேற்குமாறு வலியுறுத்தினார். மேலும், அந்த தலைவர்களிடத்தில் “பொருத்தமான நேரத்தில்” மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil