பொது முடக்கம் 2.0: எதற்கெல்லாம் அனுமதி? உள்துறை அமைச்சகம் பட்டியல்

மே 3 வரையிலான பொது முடக்கத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது

By: Updated: April 15, 2020, 05:36:37 PM

கோவிட் 19 நோய்க்கு எதிரான நடவடிக்கையாக தேசிய அளவிலான ஊரடங்கை மே மாதம் மூன்றாம் தேதி வரை நீடிக்க,மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக நேற்று பிரதமர் மோடி அறிவித்தார். மேலும்,ஏப்ரல் 20-க்குப் பிறகு, சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு, குறிப்பிட்ட அளவுக்கான விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்திய அரசின் அமைச்சகங்கள்/துறைகள், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றுக்காக ஊரடங்கு-2 நடவடிக்கைகளுக்கான திருத்தப்பட்ட ஒருங்கிணைந்த வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட  வழிகாட்டி நெறிமுறைகளில், பொது மக்களின் இன்னல்களை கருத்தில் கொண்டு சுகாதாரம், நிதி, ஊரக வளர்ச்சிப் பணிகள், பொது பயன்பாடுகள், மின் வணிகம் மறறும் சரக்கு போன்ற சேவைகளுக்கு பொது முடக்கத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விலக்கு வரும் ஏப்ரல் 20-க்குப் பிறகு, நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய செயல்பாடுகளை, தற்போது அமலில் உள்ள முடக்கநிலை அமலுக்கான வழிகாட்டுதல்களை கடுமையாக அமல் செய்வதன் அடிப்படையில் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் / மாவட்ட நிர்வாகங்கள் செயல்படுத்த வேண்டும். இந்த விதிமுறைத் தளர்வுகளை செயல்படுத்துவதற்கு முன்னதாக  அலுவலகங்கள், பணியிடங்கள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள், மற்றும் தேவையான பிற இடங்களில் தனி நபர் இடைவெளியைப் பராமரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்திருப்பதை, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் / மாவட்ட நிர்வாகங்கள் உறுதி செய்திட வேண்டும்.

மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் / மாவட்ட நிர்வாகங்களால், நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதி என எல்லை வரையறை செய்யப்பட்ட பகுதிகளுக்கு தொகுக்கப்பட்ட திருத்திய வழிகாட்டுதல்கள் பொருந்தாது. நோய்க்கட்டுப்பாட்டு மண்டலப்பட்டியலில் புதிதாக ஒரு பகுதி சேர்க்கப்பட்டால், அதுவரையில் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த மேற்குறிப்பிட்ட விஷயங்களுக்கு தற்காலிகத் தடை விதிக்கப்படும்.  மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி குறிப்பாக அனுமதிக்கப்பட்ட விஷயங்கள் அதில் சேராது.

அனுமதிக்கப்பட்டவை: 

வேளாண்மை துறை: 

குறைந்தபட்ச ஆதரவு விலை செயல்பாடு உள்ளிட்ட, வேளாண் பொருள்களைக்
கொள்முதல் செய்வதில் ஈடுபட்டுள்ள முகமைகள்.

பண்ணை எந்திரங்கள் தொடர்பான ‘வாடிக்கை வாடகை மையங்கள்’
உரங்கள், பூச்சிக்கொல்லிகள், விதைகள் உற்பத்தி மற்றும் சிப்பமிடும்
தொழில் பிரிவுகள்.

வேளாண் விளைபொருள் விற்பனைக் குழு செயல்படுத்தும் அல்லது மாநில அரசுகள் அறிவிக்கைகளின்படி செயல்படும் கொள்முதல் நிலையங்கள்.

வேளாண் எந்திரக்கடைகள், அவற்றின் உதிரி பாகங்கள் (அவற்றின் விநியோகம் உள்ளிட்டவை), பழுது நீக்குதல், நெடுஞ்சாலைகளில் உள்ள லாரி பழுது நீக்கும் கடைகள் (எரிபொருள் விற்பனை நிலையங்களில் உள்ளவற்றுக்கு முன்னுரிமை), ஆகியவை வேளாண் உற்பத்திப் பொருள்களை எடுத்துச் செல்லும் வகையில் திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தவிர, 50 சதவீத தொழிலாளர்களுடன் கூடிய தோட்டங்களைக் கொண்ட தேயிலைத் தொழிலும் இயங்கலாம்

மீன்பிடி தொழில், மீன் வளர்ப்புத் தொழில் நடவடிக்கைகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மீன் பொருட்களின் இயக்கமும் தற்போது அனுமதிக்கப்படுகிறது.

பால் மற்றும் பால் பொருட்களின் சேகரிப்பு, பதப்படுத்துதல், விநியோகம் மற்றும் விற்பனை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கால்நடை வளர்ப்பு பண்ணை தொடர்பான செயல்பாடுகள் இயங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

நிதிச் சேவைகள்:

நிதித்துறையின் முக்கிய கூறுகளாக செயல்படும்; ரிசர்வ் வங்கி, அனைத்து அட்டவணை வங்கிகள் , ஏடிஎம் சாதனங்கள், மூலதனம் மற்றும் கடன் சந்தைகளும் செயல்படும் (செபி மற்றும் காப்பீட்டு நிறுவனங்களால் அறிவிக்கப்பட்ட )

ஐஆர்டிஐ மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள்

சமூக நலத்துறை:

கட்டாய சமூக விலகல் மற்றும் முகக்கவசம் போன்ற கட்டுபாடுகளுடன் மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி வேலைவாய்ப்பு திட்டப் பணிகள் செயல்பட அனுமதி.

குழந்தைகள் நல மையம், மனநலம் காப்பகம், ஆதரவற்றோர் மற்றும் மூத்த குடிமக்களுக்கான நல்வாழ்வு மையம் போன்றவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பொது பயன்பாடுகள்: 

 1. பெட்ரோல் நிறுவனங்கள், எல்பிஜி, பெட்ரோலியம் மற்றும் எரிவாயு சேமிப்பு மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் இயங்கலாம்.
 2.  மத்திய/மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் அளவில்  மின் உற்பத்தி மற்றும் பகிர்மானங்கள் இயங்க அனுமதி
 3. தபால் நிலையங்கள் உட்பட அஞ்சல் சேவைகள்
 4. நகராட்சி, உள்ளாட்சி அமைப்பு மட்டங்களில் நடைபெறும் வழக்கமான  செயல்பாடுகள்
 5. தொலைத்தொடர்பு மற்றும் இணையம்

சரக்குப்  போக்குவரத்து சேவைகள் :

 1. அத்தியாவசியம் (அ) அத்தியாவசியமற்ற என வேறுபாடு இல்லாமல்  அனைத்து வகையான சரக்கு போக்குவரத்து அனுமதிக்கப்படும்.
 2. சரக்கு விமானம் மற்றும் சரக்கு ரயில்கள் இயங்க அனுமதிக்கப்படும்.
 3. அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதற்காக, எல்லை வழிச்சாலைகள் இயக்கப்படும்.
 4. இரண்டு டிரைவர்கள் மற்றும் ஒரு உதவியாளருடன் அனைத்து லாரிகளும் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

அத்தியாவசிய சேவைகள்: 

 • அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து கிடைக்கத் தேவைப்படும், விநியோகச் சங்கிலிகள் தொடர்ந்து இயக்கப்படும்.
 • உணவு, மளிகை பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், பால் மற்றும் பால் பொருட்கள், இறைச்சி மற்றும் மீன் கடைகள், விலங்கு தீவனம், உரங்கள், விதைகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றைக் கையாளும் ரேஷன் கடைகள் உள்ளிட்ட பொதுக் கடைகள், எந்த நேரக்கட்டுபாது  தடை இல்லாமல் இயங்கும். இருப்பினும், இது போன்ற அத்தியாவசிய பொருட்களை மக்கள் வீடுகளுக்கு நேராக விநியோகிக்கும் வசதியை ஏற்பாடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 • அச்சு ஊடகம் மற்றும் மின்னணு ஊடகம்.
 • ஈ-காமர்ஸ் மற்றும் கூரியர் சேவைகள்அரசாங்க நடவடிக்கைகளுக்கு மட்டும் தேவைப்படும் வாடிக்கையாளர் மையங்கள் .
 • சுற்றுலாப் பயணிகள்,மருத்துவர்கள் மற்றும் அவசர ஊழியர்கள், பொது முடக்கத்தால் சிக்கித் தவிக்கும் பொது மக்களுக்கு நபர்களுக்கு இடமளிக்கும் விதமாக ஹோட்டல்,தங்கும் விடுதிகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 • எலக்ட்ரீஷியன், பிளம்பர் போன்ற சுயதொழில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

எது அனுமதிக்கப்படவில்லை:

 • விமானம், ரயில், சாலை வழியான பயண சேவைகள்; கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் செயல்பாடு; தொழில்துறை மற்றும் வணிக நடவடிக்கைகள்; சினிமா அரங்குகள், வணிக வளாகங்கள், அனைத்து வகையான சமூக, அரசியல் மற்றும் மத அமர்வுகள்,  பொது ம க்கள் கூடும் வழிபாட்டுத் தலங்கள் போன்றவைகள் இயங்கள் அனுமதி கிடையாது.
 • அதிக கட்டுப்பாட்டுள்ள இடங்களில், அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து (சட்டம் ஒழுங்கு, பொது சுகாதாரம்) மற்ற செயல்பாடுகளுக்கு மக்கள் நடமாட்டம் பெருமளவில் கட்டுப்படுத்தப்படும்.
 • அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படப்படுகிறது.
 • ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றாக  கூட தடை செய்யப்பட்டுள்ளது.
 • பொது இடத்தில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும்.
 • மதுபானம், குட்கா, புகையிலை போன்றவற்றிற்கான தடைகள் கடுமையான முறையில் நடைமுறைப்படுத்தப்படும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Mha guidelines india covid 19 extension guidelines may 3

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X