புதுடெல்லியின் சிபிஐ ஊழல் தடுப்பு கிளையின் தலைவர் அஸ்ரா கார்க் என்ற அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் (எம்ஹெச்ஏ) ஊழியரை சிபிஐ வியாழக்கிழமை கைது செய்தது. கார்க் தமிழக கேடர் ஐ.பி.எஸ் அதிகாரி ஆவார்.
செப்டம்பர் 11 தேதி கார்க் தனது புகாரில், தனக்குத் தெரிந்த எம்.எச்.ஏவின் பிரிவு அதிகாரியான தீரஜ் குமார் சிங்கைத் தொடர்பு கொண்டதாகவும், தீராஜ் அவரை சோமா எண்டர்பிரைசஸின் பிரதிநிதியான தினேஷ் சந்த் குப்தாவுக்கு அறிமுகப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்களுக்கு ஆதரவாக ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்திடம் விசாரணை நடத்துவது தொடர்பாக தன்னிடம் உதவி கேட்டனர் என்று தெரிவித்துள்ளார். சோமா எண்டர்பிரைசஸ் என்பது ஒரு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமாகும், இது போக்குவரத்து, நீர் மின்சாரம் மற்றும் நீர்வளம் மற்றும் பிற தொடர்பான திட்டங்களில் செயல்படுகிறது.
தீரஜ் மீண்டும் கார்க்கைத் தொடர்பு கொண்டு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. "சட்டவிரோதமாக பணம் வழங்குவதற்கு சோமா எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் மூத்த நிர்வாக / அலுவலக பொறுப்பாளர்களிடம் ஒப்புதல் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்," என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினேஷ் மற்றும் சோமா எண்டர்பிரைசஸ் இயக்குனரான பி.ஆர்.ராவ் ஆகியோரின் சார்பாக தீரஜ் லஞ்சம் வழங்கியது உறுதிப்படுத்தப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
கார்க்கின் புகாரைச் சரிபார்க்க, சிபிஐ கார்க் சார்பாக தீரஜை அழைத்தது, கார்க் அவரைச் சந்திக்க விரும்புவதாக எம்ஹெச்ஏ அதிகாரியிடம் கேட்டனர். இந்த அழைப்பு பதிவு செய்யப்பட்டது. மேலும் ஒரு பொது சாட்சியை ஏற்பாடு செய்து, தீராஜைச் சந்திக்கச் சென்றபோது கார்கின் ஓட்டுநராக அவர் நடிக்க வைக்கப்பட்டார். மேலும் இந்த சாட்சியை அவர்கள் உரையாடலின் போது அந்த ஸ்பாட்டில் இருக்கும் அறிவுறுத்தப்பட்டு, முழு உரையாடலும் பதிவு செய்யப்பட்டது.
பின்னர், சோமா எண்டர்பிரைசஸ் தொடர்பான வழக்கு குறித்து தினேஷ், கார்க்கிடம் தெரிவித்து, அவர் இந்த விஷயத்தை தீர்ப்பதற்கு கார்க்கிற்கு ரூ.2 கோடியை வழங்கியதாகக் கூறப்படுகிறது, அதிலும் ரூ .10 லட்சத்தை முன்கூட்டியே தீரஜ் வழங்கியதாக கூறப்படுகிறது.
ஐபிசி பிரிவு 120 பி (குற்றவியல் சதித்திட்டத்தின் தண்டனை) கீழ் தீராஜ், தினேஷ், பி.ஆர்.ராவ் மற்றும் சோமா எண்டர்பிரைசஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தீரஜ் மற்றும் தினேஷ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர், பி.ஆர்.ராவ் மறுநாள் கைது செய்யப்பட்டார்.
சிபிஐ குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டது. இது சில குற்றச்சாட்டு ஆவணங்களை மீட்டெடுக்க வழிவகுத்தது.