/indian-express-tamil/media/media_files/2024/11/20/eQcqITeIm4u3g6Hy7Bhx.jpg)
இந்தாண்டுக்கான ‘சங்கீத கலாநிதி’ விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயரில் பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு வழங்கக்கூடாது என தடை விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயரைப் பயன்படுத்தாமல் அவருக்கு விருது வழங்கலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது.
தி இந்து குழுமம் மற்றும் சென்னை மியூசிக் அகாடமி இணைந்து வழங்கும் புகழ்பெற்ற சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதை, எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரைப் பயன்படுத்தாமல் புகழ்பெற்ற பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கலாம் எனக் கூறியுள்ளது.
நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் செவ்வாய்க்கிழமை வழங்கிய தீர்ப்பு, இந்தியாவின் கர்நாடக இசை சமூகத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருதை மியூசிக் அகாடமி வழங்கலாம். ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கலாம் ஆனால் விருதில் சுப்புலட்சுமியின் பெயரைப் பய்ன்படுத்தக கூடாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சுப்புலட்சுமியின் பேரன் வி. ஸ்ரீனிவாசன் தாக்கல் செய்த சட்ட வழக்கால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்குவது அவரது கடைசி விருப்பத்திற்கு நேர் எதிரானது என்று வாதிட்டார்.
1997 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட எம்.எஸ்.சுப்புலட்சுமி உயிலில், கர்நாடக இசையின் அடையாளக் குரலான எம்.எஸ்.சுப்புலட்சுமி, தனது பெயரில் நினைவுச் சின்னங்கள், அறக்கட்டளைகளை உருவாக்கக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.
ஸ்ரீனிவாசனின் கூற்றை நீதிபதி ஜெயச்சந்திரன் உறுதிப்படுத்தி, “இறந்த ஆன்மாவை கௌரவிக்க அவரது விருப்பத்திற்கு மதிப்பளிப்பதே சிறந்த வழி. எம்.எஸ்.சுப்புலட்சுமி மீது யாருக்காவது மரியாதை இருந்தால், அவரது விருப்பம் அறிந்து அவர் பெயரில் விருது வழங்குவதைத் தொடரக்கூடாது என்றார்.
ஆண்டுதோறும் மியூசிக் அகாடமியால் சங்கீத கலாநிதி விருதுக்கு பெயர்கள் தேர்ந்தெடுக்கப்படும். சுப்புலட்சுமியின் நினைவைப் போற்றும் வகையில் இந்து குழுமம் 2005 முதல் விருது வழங்கி வருகிறது.
ஆங்கிலத்தில் படிக்க: ‘Respect her wishes’: Madras High Court restrains Music Academy from conferring M S Subbulakshmi Award to T M Krishna
கிருஷ்ணா கர்நாடக சங்கீதத்தில் நன்கு அறியப்பட்ட நபர். அவரது திறமை மற்றும் சமூக பணிகளுக்காக அர்ப்பணிப்புக்காக கொண்டாடப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.