Advertisment

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 'வானிலை ஒரு காரணியாக இருக்கலாம்' - ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி

The Mi-17V5 is considered one of the “safest” and “most modern” military transport helicopters, said by a retired IAF officer Tamil News: Mi-17V5 ஹெலிகாப்டர் "பாதுகாப்பான" மற்றும் "மிகவும் நவீன" இராணுவ போக்குவரத்து ஹெலிகாப்டர்களில் ஒன்றாக கருதப்படுகிறது என ஓய்வுபெற்ற இந்திய விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
mi-17 v5 helicopter crash Tamil News: weather could have been crash factor

Mi-17V5 helicopter crash Tamil News: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

Advertisment

நேற்று புதன்கிழமை நடந்த இந்த கோர சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மேலும், ராணுவ உயர் அதிகாரிகள் பயணித்த இந்த ஹெலிகாப்டர் எப்படி விபத்துக்குள்ளனது என்பது குறித்த விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்துக்கு வானிலை ஒரு காரணியாக இருந்திருக்கலாம் என ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

"நேற்று விபத்துக்குள்ளான இந்த Mi-17V5 ஹெலிகாப்டர் கோயம்புத்தூர் அருகே உள்ள சூலூர் விமான தளத்தில் உள்ள 109-வது ஹெலிகாப்டர் யூனிட்டைச் சேர்ந்தது. இது கடைசியாக சர்வீஸ் செய்யப்பட்ட பிறகு 26 மணி நேரத்திற்கும் மேலாகப் பறந்துள்ளது.

இந்த குறிப்பிட்ட ஹெலிகாப்டரின் கடைசி 2-3 முறைகளில் சிஸ்டம் செயலிழப்பு அல்லது ஸ்னாக் (எதிர்பாராத குறைபாடு) எதுவும் பதிவாகவில்லை என ஆதாரங்கள் கூறுகின்றன. இந்த ஹெலிகாப்டரின் வரலாறு தெளிவாக இருக்கிறது. மேலும் தொழில்நுட்ப கோளாறு எதுவும் இல்லை.

மேலும், இந்த Mi-17V5 ஹெலிகாப்டர் "பாதுகாப்பான" மற்றும் "மிகவும் நவீன" இராணுவ போக்குவரத்து ஹெலிகாப்டர்களில் ஒன்றாக கருதப்படுகிறது என ஓய்வுபெற்ற இந்திய விமானப்படை அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "விரிவான விசாரணைக்காக நாம் காத்திருக்க வேண்டும், ஆனால் ஹெலிகாப்டர் மாதிரியின் கடந்தகால பதிவு அது இது போன்ற தொழில்நுட்ப கோளாறு செய்ய முடியாதது மற்றும் 100% நம்பகமானது என்பதைக் காட்டுகிறது.

இந்திய விமானப்படை நெறிமுறையின்படி, எந்தவொரு விஐபி விமானங்களும் மூன்று-நிலை இயந்திர சோதனைக்கு உட்படுகிறது. அதைத் தொடர்ந்து விமானத்திற்கான அணுகல் சீல் வைக்கப்படுகிறது. எனது கருத்துப்படி, இது ஒரு விசித்திரமான விபத்தாக இருக்க வேண்டும். ஏனென்றால் ஒரு ஹெலிகாப்டரின் இரண்டு இயந்திரங்களும் (எஞ்சின்) செயலிழந்தாலும், சரியான சூழ்நிலையில் எங்காவது ஒரு நெல் வயலில் இறங்க முடியும்," என்று அந்த ஓய்வு பெற்ற அதிகாரி தெரிவிக்கிறார்.

Mi-17 V5 ஹெலிகாப்டர் ஒரு "மன்னிக்கும்" (forgiving) விமானம். இது மிகவும் உறுதியானது மற்றும் வலுவானது. மேலும் தீவிர தட்பவெட்ப சூழ்நிலைகளில் இந்த ஹெலிகாப்டரால் பறக்க முடியும். "விபத்திற்கு பெரும்பாலும் காரணம் பனிமூட்டமான வானிலையாக இருக்கலாம். இது தெரிவுநிலையை குறைக்கிறது. சிதைவு முறையைப் பார்க்கும்போது, ​​ஹெலிகாப்டர் மரத்தின் தண்டுகளைத் தாக்கியிருக்கலாம் அல்லது அதன் ரோட்டார் மேல்நிலை கேபிள்களில் சிக்கியிருக்கலாம்" என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

publive-image

மத்திய அரசு கடந்த 2008ம் ஆண்டு 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் 80 Mi-17V5 ஹெலிகாப்டர்களுக்கான ஒப்பந்தத்தை ரஷ்ய உற்பத்தியாளர்களிடம் வழங்கியது. இவற்றில் முதலாவது 2013ல் இந்தியாவிற்கு வழங்கப்பட்டது, இறுதி தயாரிப்பு 2018ல் வந்தது.

இந்த ஹெலிகாப்டர்கள் பல அம்சங்களை கொண்டுள்ளன. இதில் துருப்புக்களை ஏற்றிச் செல்வதற்கான 36 இருக்கைகள், சரக்கு போக்குவரத்து மற்றும் அவசரகால மிதவை அமைப்புடன் கூடிய பதிப்பு ஆகியவையும் அடங்கும். இது ஒரு விமானி, துணை விமானி மற்றும் விமானப் பொறியாளர் ஆகிய மூன்று பேர் கொண்ட குழுவினரால் இயக்கப்படுகிறது.

சிங்கிள் ரோட்டார் ஹெலிகாப்டர் அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகத்தையும், மணிக்கு 230 கிமீ வேகத்தில் பயணிக்கும். அதன் முக்கிய எரிபொருள் தொட்டிகளின் வரம்பு 675 கிமீ ஆகும். இரண்டு துணை எரிபொருள் தொட்டிகளுடன் 1,180 கிமீ வரை பறக்க முடியும். இது அதிகபட்சமாக 4,000 கிலோ எடையை சுமந்து செல்லும்.

Mi-17V5 ஹெலிகாப்டர்களை பழுதுபார்க்கும் மற்றும் மாற்றியமைக்கும் வசதி சண்டிகர் விமானப்படை தளத்தில் உள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்த வகை ஹெலிகாப்டர் மாறுபாட்டின் ஐந்தாவது விபத்து இது ஆகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Indian Army Bipin Rawat Iaf Indian Air Force Chandigarh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment