Advertisment

ஏழைகளுக்கு 10 கிலோ இலவச ரேஷன்- மக்களவைத் தேர்தல் பாதி முடிந்த நிலையில் காங்கிரஸ் புதிய அறிவிப்பு

தேர்தலுக்கு முந்தைய காங்கிரஸ் அறிக்கை இலவச ரேஷன் குறித்து மௌனமாக இருந்தது, தற்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் அறிவிப்பு கட்சியில் உள்ள பல தலைவர்களை ஆச்சரியப்படுத்தியது.

author-image
WebDesk
New Update
double ration for poor

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் புதன்கிழமை லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்த போது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மக்களவைத் தேர்தல் பாதி முடிந்த நிலையில், ண்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால், ஒவ்வொரு மாதமும் ஏழைகளுக்கு 10 கிலோ இலவச ரேஷன் வழங்கப்படும் என்று, காங்கிரஸ் புதன்கிழமை ஒரு புதிய தேர்தல் வாக்குறுதியை அறிவித்தது.

Advertisment

இது பாஜக அரசாங்கத்தின் 5 கிலோ திட்டத்தை விட இரட்டிப்பாக்கும்.

தேர்தலுக்கு முந்தைய காங்கிரஸ் அறிக்கை இலவச ரேஷன் குறித்து மௌனமாக இருந்தது, தற்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் அறிவிப்பு கட்சியில் உள்ள பல தலைவர்களை ஆச்சரியப்படுத்தியது.

இலவச ரேஷன் விநியோகம் செய்ததாக பாஜக உரிமை கோருவதாக விமர்சித்த கார்கே, ‘உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நாங்கள் கொண்டு வந்தோம், அது நிறுத்தப்பட்டால் யார் வேண்டுமானாலும் நீதிமன்றத்திற்குச் செல்லலாம். நீங்கள் எதுவும் கொடுக்கவில்லை, ஆனால் இன்னும் 80 கோடி மக்களுக்கு உணவளிப்பதைப் பற்றி பேசுகிறீர்கள்.

நீங்கள் 5 கிலோ ரேஷன் தருகிறீர்கள் என்றால், எங்கள் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்ததும், 10 கிலோ தருவோம்”, என்று லக்னோவில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

சில நாட்களுக்கு முன்பு, பிரியங்கா காந்தி, இலவச உணவு தானியங்களை வழங்குவதன் மூலம் மக்களை தன்னை சார்ந்திருக்க செய்கிறது, சுயாதீனமாக ஆக்கவில்லை என்று பாஜக மீது குற்றம் சாட்டினார்.

ரேபரேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரியங்கா பேசுகையில், “இந்த 5 கிலோ ரேஷன் யாருடைய வயிற்றையும் நிரப்பாது. நீங்கள் அதைப் பெறுவது நல்லது, ஆனால் இது உங்களை சுயசார்புடையவராக மாற்றாது அல்லது உங்கள் எதிர்காலத்தை பிரகாசமாக்காது.

இளைஞர்களிடம் 5 கிலோ ரேஷன் அல்லது வேலை எதை விரும்புகிறீர்கள் என்று நான் கேட்டால், நீங்கள் ஒரு வேலையைத் தேர்ந்தெடுப்பீர்கள், இல்லையா? ஏனெனில் ஒரு வேலை உங்களுக்கு வருமானத்தை ஈட்டித் தரும், மேலும் உங்களை சுயசார்புடையவர்களாக மாற்றும்.

எனவே, ஒரு அரசியல் கட்சி உங்களைச் சார்ந்தும், சுயசார்பும் இல்லாத கொள்கைகளை உருவாக்குகிறது, அதன் கொள்கை சரியானதல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

ஆனால் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய காங்கிரஸ் தலைவர்கள், நரேந்திர மோடி அரசின் இலவச ரேஷன் திட்டம் குறித்து களத்தில் பேசப்படுவதை ஒப்புக்கொண்டனர்.

இலவச உணவு தானியங்கள் திட்டத்திற்கான பெருமையை கூறி, செவ்வாய்கிழமை ஜான்சியில் நடந்த பேரணியில் ராகுல் காந்தி பேசுகையில்,நரேந்திர மோடியால் விநியோகிக்கப்படும் இலவச உணவு தானியங்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் வந்தது. இது எங்கள் திட்டம். நாங்கள் மீண்டும் அரசாங்கத்தை அமைக்கும் போது, ​​அவர்கள் செய்வதை விட சிறந்த அரிசி மற்றும் உணவு தானியங்களை விநியோகிப்போம்” என்றார்.

புதன் அன்று கார்கேவின் அறிவிப்பை யோசித்து சில தலைவர்கள் ஆச்சரியப்பட்டனர்.

"காங்கிரஸ் தலைவரின் அறிக்கை குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது," என்று ப சிதம்பரம் கூறினார், அவர் தலைமையிலான கட்சியின் தேர்தல் அறிக்கை குழு இந்த திட்டத்தை விவாதித்ததா என்று கேட்டபோது. "இது விவாதிக்கப்படவில்லை மற்றும் ஒருபோதும் பரிசீலிக்கப்படவில்லை" என்று குழுவின் உறுப்பினர் ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 81.35 கோடி பேருக்கு இலவச உணவு தானியங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை ஏப்ரல் 2020 இல் கோவிட் வெடித்ததை அடுத்து மத்திய அரசு தொடங்கியது.

இத்திட்டத்தின் கீழ், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, மானிய விலையில் வழங்கப்படும் உணவுப் பொருள்களுக்கான உரிமையின் அடிப்படையில் ஒவ்வொரு நபருக்கும் கூடுதலாக 5 கிலோ இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டன.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், அரிசி கிலோவுக்கு ரூ.3க்கும், கோதுமை கிலோவுக்கு ரூ.2க்கும், தானியங்கள் கிலோவுக்கு ரூ.1க்கும் வழங்கப்படுகிறது.

டிசம்பர் 2022 இல், அரசாங்கம் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்துடன் இணைத்து, ஜனவரி 2023 முதல் ஒரு வருடத்திற்கு NFSA பயனாளிகளுக்கு அவர்களின் உரிமையின்படி இலவச உணவு தானியங்களை வழங்க அரசாங்கம் முடிவு செய்தது.

ஆனால் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த கூடுதல் அளவை (5 கிலோ) நிறுத்தியது.

நவம்பரில் மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, இந்தத் திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக அறிவித்தார்.

சில நாட்களுக்குப் பிறகு, மத்திய அமைச்சரவை இந்த ஆண்டு ஜனவரி முதல் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்புக்கு அனுமதி அளித்தது.

பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் மக்களுக்கு இலவச உணவு தானியங்களை வழங்க அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மையம் தோராயமாக ரூ. 11.80 லட்சம் கோடி பணத்தை செலவிடும், என்று ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை கூறியது.

Read in English: Midway elections, Congress chief takes party by surprise, says will double ration for poor to 10 kg

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment