Migrant mother carries her son as he sleeps on her suitcase - viral video : கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் ஐம்பது நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது.
மேலும் படிக்க : வைரஸ் ஒருபுறம்! பாழாய் போன வெட்டுக்கிளிகள் மறுபுறம் ; மீண்டெழுமா இந்தியா?
பொது போக்குவரத்தான ரயில்கள் மற்றும் அரசு பேருந்துகள் முற்றிலுமாக முடக்கப்பட்டு இருக்கும் நிலையில் வெளி மாநிலங்களுக்கு வேலைக்கு சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் வெறும் கால்களிலேயே ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு நடந்து செல்லும் அவலம் இந்தியாவில் தினந்தோறும் அரங்கேறி வருகிறது.
தன்னுடைய சொந்த ஊர் போய் செல்வதற்குள் நிறைய குழந்தைகள் உயிரிழந்த கொடுமைகளும் நிகழ்ந்தது. சிலரோ காவல்துறையின் கட்டுப்பாடுகளுக்கு பயந்து கொண்டு மறுபடியும் தங்களை ஒரே இடத்தில் இருக்கு சொல்வார்களோ என்று அஞ்சி ரயில்வே தண்டவாளங்கள் வழியாக தங்களின் சொந்த ஊருக்கு செல்ல முயன்ற நிகழ்வுகளும், அவர்கள் மீது ரயில் ஏறிய கொடுமையும் இந்தியாவில் அரங்கேறியது.
”உணவில்லாமல் செத்துவிடுவோம் போல் இருக்கிறது” ரயில் விபத்தில் இறந்த தொழிலாளியின் கடைசி போன் கால்!
இந்நிலையில் புலம்பெயர் தொழிலாளி ஒருவரின் மகன் அப்பெண் வைத்திருக்கும் சூட்கேஸ் மீது படுத்துக்கொண்டு செல்லும் காட்சி மனதை உருக்குவதாக அமைந்துள்ளது. இவர்கள் எப்போது வீடு போய்ச் சேர்வார்கள் என்ற எண்ணமும் கவலையும் தான் தற்போது மேலோங்கி இருக்கிறது. இவர்கள் ஆரோக்கியமாகவும், எந்த ஒரு பிரச்சனையும் இன்றி தங்களின் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்பதே இன்று அனைவரின் கனவாகவும் எதிர்பார்ப்பாகவும் பிரார்த்தனையாகவும் இருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"