ஜம்மு காஷ்மீரில் 3 நாட்களில் தொடர்ந்து 3-வது முறையாக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளது எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. கடந்த 3 நாட்களில் யூனியன் பிரதேசத்தில் நடந்த 3-வது பயங்கரவாத தாக்குதல் இதுவாகும்.
தோடாவின் சத்தர்கலா பகுதியில் உள்ள 4 ராஷ்டிரிய ரைபிள்ஸ் மற்றும் காவல்துறையின் கூட்டு சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது மோதல் தொடங்கியது, இதையடுத்து பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.
துப்பாக்கிச் சூடு தாக்குதல் தொடர்ந்து நடந்து வருவதாக கூடுதல் காவல்துறை இயக்குநர் ஆனந்த் ஜெயின் உறுதிப்படுத்தினார். தொடர்ந்து சைதா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கும் பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
தீவிரவாதிகள் வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து தண்ணீர் கேட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தீவிரவாதிகளை பார்த்ததும், அங்கு தங்கியிருந்த தந்தையும், மகனும் தப்பி ஓடியதால், தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/india/encounter-breaks-out-in-jammu-and-kashmirs-doda-between-terrorists-security-forces-9386935/
இதற்கிடையில், ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழு சம்பவ இடத்திற்கு வந்து
பதிலடி கொடுத்தனர். இதில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், அப்பகுதியில் பதுங்கியிருக்கும் எஞ்சிய பயங்கரவாதிகளை ஒழிக்க காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினரின் கூட்டு நடவடிக்கை நடந்து வருகிறது.
முன்னதாக, கடந்த 2 நாட்களிளில் ஜம்மு காஷ்மீரின் ரீசி மற்றும் கத்வாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஞாயிற்றுக்கிழமை ரியாசி மாவட்டத்தில் ஷிவ் கோரி கோவிலில் இருந்து கத்ராவுக்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விழுந்தது. இதில் 9 பேர் உயிரிந்தனர், 41 பேர் காயமடைந்தனர்.
தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவரின் படத்தை வரைந்து ஜே & கே போலீசார் வெளியிட்டுள்ளனர். அவரைப் பற்றி தகவல் வழங்கினால் 20 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“