சந்தைக்கு சென்ற பண்டிட்.. சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள்.. காஷ்மீரில் பயங்கரம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பண்டிட் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Militants gun down Kashmiri Pandit in Pulwama first fatal attack on community member since October
ஜம்மு காஷ்மீரில் பண்டிட் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அச்சன் கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் சர்மா. மாநிலத்தின் சிறுபான்மை பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த இவர், ஞாயிற்றுக்கிழமை (பிப்.26) காலை உள்ளூரில் உள்ள சந்தைக்கு சென்றிருந்தார்.

அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் இவர் மீது துப்பாக்கியால் சுட்டு கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் சஞ்சய் சர்மா படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது உயிர் பிரிந்தது.

இந்தப் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்திவருவது தொடர கதையாகி வருகிறது.

கடந்தாண்டு (2022) அக்டோபர் மாதம் பள்ளத் தாக்கில் பண்டிட் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பின்னர் நடந்த முதல் தாக்குதல் இதுவாகும்.
இந்த நிலையில் பண்டிட் மீதான தாக்குதலுக்கு பண்டிட் சமூக அமைப்பு மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Militants gun down kashmiri pandit in pulwama first fatal attack on community member since october

Exit mobile version