Advertisment

டெல்லி ரகசியம்: மத்திய அமைச்சரின் கண்காணிப்பில் 50 பெண்கள்… என்ன காரணம்?

இந்த 50 பெண்களும் அடுத்த ஆறு மாதங்களுக்கு அமைச்சகத்தால் கண்காணிக்கப்படுவார்கள். ஒவ்வொரு மாதமும் இதேபோன்ற மருத்துவ பரிசோதனைகள் மூலம் அவர்களின் உடல்நிலையை மதிப்பிடப்படும்.

author-image
WebDesk
New Update
டெல்லி ரகசியம்: மத்திய அமைச்சரின் கண்காணிப்பில் 50 பெண்கள்… என்ன காரணம்?

மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், சர்வதேச மகளிர் தினத்தில் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார். செவ்வாய்கிழமை காலை 8 மணியளவில், செங்கல் சூளை, பீடிகளை உருட்டும் தொழிலில் ஈடுபடும் 50 பெண் தொழிலாளர்கள், அமைச்சரின் இல்லத்திற்கு வந்தனர். அவர்களுக்கு முழு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, அவர்களது பணி சூழலால் ஏதெனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறியும் ஹெல்த் செக்அப் நடைபெற்றது. மேலும், இந்த 50 பெண்களும் அடுத்த ஆறு மாதங்களுக்கு அமைச்சகத்தால் கண்காணிக்கப்படுவார்கள். ஒவ்வொரு மாதமும் இதேபோன்ற மருத்துவ பரிசோதனைகள் மூலம் அவர்களின் உடல்நிலையை மதிப்பிடப்படும். இந்த தரவுகளின் அடிப்படையில், இதேபோன்ற சூழ்நிலைகளில் பணியாற்றும் பெண்களின் உடல்நிலையை கண்காணிக்க அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை, கண்காணிப்பில் இருக்கும் பெண்களுடன் உரையாற்ற யாதவ் அழைப்பு விடுத்தார்.

Advertisment

நாடாளுமன்றத்தில் தளர்வுகள்

கொரோனா பரவல் குறைந்துள்ளதால், அடுத்த வாரம் மீண்டும் தொடங்க உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது, முந்தைய குளிர்காலக் கூட்டத் தொடரில் அமலுக்கு இருந்த கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வரவுள்ளது. இரு அவைகளும் காலை 11 மணிக்கு தொடங்கி நாள் முழுவதும் செயல்படும்.

இந்த முறை, முந்தைய பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்டத்தைப் போல் இல்லாமல் உறுப்பினர்கள் அந்தந்த அறைகளிலும் கேலரிகளிலும் அமர்வார்கள் .

மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதிக்கான இருக்கை ஏற்பாடு குறித்து விவாதித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. தொற்றுநோயின் 3ஆவது அலை குறைந்துள்ளதால், இரு அவைகளின் பொதுச் செயலாளர்களும் இந்த விவகாரம் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்தில் ஒலித்த மூத்த வழக்கறிஞரின் குரல்

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா அமர்வில், நடுவர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக சட்ட வட்டாரங்களில் முணுமுணுப்பு வந்தது. பொதுவாக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நடுவர்களாக நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் குறிப்பிட்ட தொகை தான் கட்டணமாக வாங்க வேண்டும் என ரூல்ஸ் இருக்கும் போது, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதனை சுட்டிக்காட்டி, உச்சநீதின்றம் அதற்கான கட்டணத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் குரல் கொடுத்தார்.

நடுவர் கட்டணத்தின் மீதான உச்சவரம்பு பிரச்சினை தொடர்பான அனைத்து வழக்குகளையும் பட்டியலிட்ட, இந்திய தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு, நடுவர் மன்றத்தின் நான்காவது அட்டவணையின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட நடுவர்களுக்கான கட்டண மாதிரி அட்டவணையின் தன்மையை ஆய்வு செய்ய ஒப்புக்கொண்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

International Womens Day
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment