லக்கிம்பூர் வன்முறையில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆசிஷ் மிஸ்ரா உள்பட பலர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல் துறையினர் ஆசிஷ் மிஸ்ராவுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், அவர் ஆஜராகவில்லை. இதனையடுத்து, இரண்டாம் முறையாக அவர் வீட்டின் முன்பு சனிக்கிழமை காலை 11 மணிக்குள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் ஒட்டினர். அதில், இம்முறை ஆஜராக தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருந்தனர்.
Advertisment
அதன்பேரில், நேற்று காலை 10. 30 மணியளவில் ஆசிஷ் மிஸ்ரா லக்கிம்பூர் குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அப்போது அவருடன் வழக்கறிஞரும், பாஜக எம்எல்ஏ யோகேஷ் வர்மாவும் வந்தனர். ஆசிஷிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
தொடர்ந்து, இரவு 11 மணியளவில் பேசிய டிஐஜி உபேந்திர குமார் அகர்வால், " ஆசிஷ் மிஷ்ரா விசாரணைக்குச் சரியாக ஒத்துழைக்கவில்லை. அவர் முறையாக பதிலளிக்கவில்லை. அவரை கஸ்டடியில் எடுத்து, விசாரிக்கவுள்ளோம். நாளை அவர், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவார்" என தெரிவித்தார்.
#BREAKING | Lakhimpur Kheri Violence: Union MoS Ajay Mishra’s son Ashish, accused of running over farmers, arrested
இதைத் தொடர்ந்து, அதிகாலை 1 மணியளவில் அவர் லக்கிம்பூர் கெரி சிறைக்கு மாற்றப்பட்டார்.
இதுகுறித்து பேசிய அவரது வழக்கறிஞர், "ஆசிஷ் மிஸ்ராவை காவல் துறையினர் மூன்று நாள்கள் போலீஸ் கஸ்டடியில் எடுத்துள்ளனர். ஆனால், அவர் போலீஸ் கஸ்டடியில் இருப்பாரா இல்லையா என்பது, நாளை நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையில் தான் தெரியவரும். தற்சமயம், அவர் திங்கட்கிழமை காலை வரை சிறையில் இருப்பார்" என்றார்.
விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்து வரும் சம்யுக்த் கிசான் மோர்ச்சா (எஸ்.கே.எம்), மத்திய அமைச்சர் மிஸ்ரா பதவி விலக வேண்டும். அவரை காவல் துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்துள்ளனர்.
லக்கிம்பூர் கெரி சம்பவம் தொடர்பாக இரண்டு வழக்குகள் டிக்குனியா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒன்று ஆஷிஷ் மற்றும் 15-20 பேருக்கு எதிராக கொலை மற்றும் கலவரம் குறித்தும், மற்றொரு வழக்கு அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
லக்னோ மண்டலம் ஏடிஜி சத்யா நரேன் சபாத், தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், “வெள்ளிக்கிழமை இரண்டாவது நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. விசாரணையின் அடிப்படையில், இதுவரை 10 பேரின் பெயர்கள் இந்தச் சம்பவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. 10 பேரில் இருவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர், தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் மூவர் இறந்துவிட்டனர்” என தெரிவித்தார்.
இதற்கிடையில், போராட்டத்தில் விவசாயிகள் மீது ஏற்றி சென்ற வாகனங்களில் ஒன்றை இயக்கியது ஆசிஷ் மிஸ்ரா என்ற குற்றச்சாட்டை மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மறுத்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil