கஜா புயல் மீட்புப் பணிகளுக்காக தமிழக அரசு ராணுவ உதவியை கேட்கவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நிர்மலா சீதாராமன் :
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட தமிழகம் வந்துள்ளார். நேற்றைய தினம் நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை பார்வையிட்டார்.
இன்று தஞ்சாவூர் மாவட்டத்தினையும் ஆய்வு செய்கிறார். முதலில் வேதாரண்யம், அகஸ்தியம்பள்ளிக்கு சென்று, புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டதுடன், பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
வீடுகளை இழந்துள்ள, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளதாக கூறிய நிர்மலா சீதாராமன், புயலில் வீடுகளை இழந்த அனைவருக்கும் வீடு கட்டித்தர மத்திய அரசு முடிவு செய்துள்ளாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அப்போது ”புயல் மீட்புப் பணிகளுக்காக, தமிழக அரசு ராணுவ உதவியை கேட்கவில்லை” என்றார்.
இப்போது கேட்டால் மத்திய அரசு உதவ தயாராத இருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.