ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில், அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரை பிரதமர் நரேந்திர மோடியிடம் பாராட்டினார்.தொழில்முனைவோர், திறன் மேம்பாடு, மின்னணுவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சரான அவரை, பொருளாதாரம் குறித்து பேச ஒரு நாள் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகாவைச் சேர்ந்த சந்திரசேகர், கூட்டத்தில் இந்தியில் பேசியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவரின் முயற்சியை பிரதமர் மோடி பாராட்டியதாகக் கட்சித் தலைவர்கள் தகவல் தெரிவித்தனர்.
கட்சி வட்டாரங்கள் கூற்றுபடி, மாலை 5 மணி வரை மதிய உணவு இடைவேளையின்றி, ஒவ்வொருவரும் பேசுவதைக் கேட்டுக்கொண்டும், குறிப்புகளை எடுத்துக்கொண்டும், முழு அமர்விலும் பிரதமர் மோடி அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
புதிய பொறுப்பு
சுவிட்சர்லாந்திற்கான இந்தியத் தூதராக வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளராக உள்ள சஞ்சய் பட்டாச்சார்யா நியமிக்கப்பட்டுள்ளார். பல சர்வதேச நிறுவனங்கள் சுவிட்சர்லாந்தை நம்பியுள்ளதால், அது மிகவும் முக்கியமான பொறுப்பாகும். WHO, WTO, FIFA மற்றும் UN இன் இரண்டாவது பெரிய அலுவலகம் அங்கு உள்ளது.
1987 பேட்சைச் சேர்ந்த பட்டாச்சார்யா, துருக்கி மற்றும் எகிப்தில் தூதராகவும், டாக்காவில் துணை உயர் ஆணையராகவும் பணியாற்றிய மூத்த மற்றும் அனுபவமிக்க அதிகாரி ஆகும்.
ஒழுங்கு நடவடிக்கை வழிமுறைகள் வெளியீடு
ஒழுங்கு நடவடிக்கை குழு, தவறு செய்யும் அதிகாரிகளுக்கு தண்டனை அளிப்பதிலும், அபராதம் வசூலிப்பதிலும் முறையான நடவடிக்கைகளைப் பின்பற்றாததை அரசாங்கம் கவனித்துள்ளது. இதன் காரணமாக, அவர்கள் எளிதாக நீதிமன்ற தண்டனையிலிருந்து வெளிவரும் சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.
இதைத் தடுக்கும் விதமாக, பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை, தவறு செய்பவர்கள் மீது எடுக்கவேண்டிய நிலையான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், சட்டத்திலிருந்து அதிகாரிகள் தப்பிப்பது நடைபெறாது என கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil