New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/28/xv6PZRTCqJPnKbwxABgg.jpg)
உமாசங்கர் கொலை: "என்னை தொடர்புபடுத்த வேண்டாம்" - புதுச்சேரி அமைச்சர் சாய் ஜே சரவணக்குமார் விளக்கம்
புதுச்சேரியில் பா.ஜ.க. மாநில இளைஞரணி துணைத் தலைவர் வெட்டிக் கொல்லப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட கருவாடிக்குப்பத்தை சேர்ந்தவர் உமா சங்கர். இவர் பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவராக பதவி வகித்து வந்தார். இவர் மீது தமிழ்நாடு, புதுச்சேரியில் பல்வேறு காவல்நிலையங்களில் வழிப்பறி, பாலியல் தொழில், கொலை வழக்கு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இவருக்கு ஏற்கனவே கொலைமிரட்டல் இருந்து வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், ஏப்.26 இரவு காமராஜ் நகர் தொகுதியில் பிறந்தநாள் விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்துவிட்டு உமார் சங்கர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 10க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் உமா சங்கரை வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பியது. இதில், முகம், கை, உடல் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயமடைந்த உமா சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே புதுச்சேரி மாநில பா.ஜ.க அமைச்சர் சாய் ஜே சரவணக்குமார், இந்த கொலை தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த கொலை அரசியல் காரணத்தினால்தான் நடந்திருக்கலாம் என்பதைக் கூறி, சிலர் அமைச்சர் சாய் ஜே சரவணக்குமாரை தொடர்புபடுத்தி பேச தொடங்கியுள்ளனர். இதனைக் கடுமையாக மறுத்து, தன்னுடன் இந்த கொலைக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என அமைச்சர் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
அமைச்சர் சாய் ஜே சரவணக்குமார் தனது வீடியோவில், “உமாசங்கரின் கொலைக்கு எனக்கு தொடர்பு இருப்பதாக பிரச்சாரம் செய்யப்படுவது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. இந்த கொலையுடன் எனக்கு எந்த சம்மந்தம் இல்லை. தேவைப்பட்டால் சிபிஐ வைத்து என்னை விசாரித்துக் கொள்ளுங்கள் அந்த கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. என் மீது தவறான புகார்கள் பரப்பப்படுகின்றன.உண்மை விரைவில் வெளிவரும். அரசியல் உள்நோக்கத்தோடு எனக்கும் என் குடும்பத்தினர் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சி செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். இது சம்பந்தமாக முதலமைச்சர், கவர்னர், டி.ஜி.பி யை சந்தித்து புகார் தெரிவிக்க உள்ளேன் என சரவணன்குமார் வீடியோ பதிவு செய்து விளக்கம் அளித்துள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.