Advertisment

என்.ஜி.ஓ.க்களின் எஃப்.சி.ஆர்.ஏ பதிவுக்கான கால அவகாசம் நீட்டிப்பு - உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

மதர் தெரசாவால் நிறுவப்பட்ட மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியின் என்ற தொண்டு நிறுவனத்தின் புதுப்பிப்பு விண்ணப்பத்தை டிசம்பர் 25ம் தேதி உள்துறை அமைச்சகம் ஏற்க மறுத்த சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Ministry Of Home Affairs, MHA extends FCRA registration of NGOs till March 2022, NGOs, FCRA, தொண்டு நிறுவனங்களின் எஃப்சிஆர்ஏ பதிவுக்கான கால அவகாசம் நீட்டிப்பு, உள்துறை அமைச்சகம் அறிவிப்பு, என்ஜிஓ, india, ngos fcra registration

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் (எஃப்.சி.ஆர்.ஏ) கீழ் என்.ஜி.ஓ.க்களின் பதிவு செல்லுபடியாகும் காலத்தை செப்டம்பர் 29, 2020 முதல் மார்ச் 31, 2022 வரை உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை நீட்டித்துள்ளது. முன்னதாக, இந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை மட்டுமே புதுப்பிப்பதற்கான நீட்டிப்பு வழங்கப்பட்டது.

Advertisment

“மத்திய அரசு பொது நலன் கருதி அரசு, எஃப்.சி.ஆர்.ஏ பதிவுச் சான்றிதழ்களின் செல்லுபடியாகும் காலத்தை மார்ச் 31, 2022 வரை அல்லது புதுப்பித்தல் விண்ணப்பத்தின் முடிவு தேதி வரை அல்லது எந்த தேதி முன்னதாக வருகிறதோ அந்த தேதி வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளது” என்று உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

மதர் தெரசாவால் நிறுவப்பட்ட மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியின் தொண்டு நிறுவனமான புதுப்பிப்பு விண்ணப்பத்தை உள்துறை அமைச்சகம் டிசம்பர் 25ம் தேதி ஏற்க மறுத்த சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.

சில பாதகமான தகவல்களின் அடிப்படையில் மதர் தெரசாவால் நிறுவப்பட்ட தொண்டு நிறுவனத்தின் புதுப்பித்தலை மறுத்ததாக உள்துறை அமைச்சகம் கூறியது. தொண்டு நிறுவனத்தின் பதிவு அக்டோபர் 31ம் தேதி காலாவதியானதால் புதுப்பித்தலுக்கு விண்ணப்பித்திருந்தது. உள்துறை அமைச்சகம் புதுப்பிப்பதற்கு மறுத்ததைத் தொடர்ந்து, இந்த தொண்டு நிறுவனம் அதன் அனைத்து மையங்களுக்கும் தொண்டு நிறுவனங்களின் வெளிநாட்டு பங்களிப்பு வங்கிக் கணக்குகளை இயக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியது.

எஃப்.சி.ஆர்.ஏ திருத்தம் மோசமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டதால், தொற்றுநோய்க்கு மத்தியில் எதுவும் செய்ய முடியவில்லை என்று பல்வேறு நீதிமன்றங்களில் பல தொண்டு நிறுவனங்கள் மனுக்களை தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சகம் புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது.

எவ்வாறாயினும், சில நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் என்ஜிஓக்கள் மட்டுமே புதுப்பித்தலில் அங்கீகரிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமைச்சகத்தின் கூற்றுப்படி, வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) விதிகள், 2011-ன் விதி 12ன் படி பதிவுச் சான்றிதழ் காலாவதியாகும் முன் நிறுவனங்கள் எஃப்.சி.ஆர்.ஏ தளத்தில் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

“எனவே, அனைத்து எஃப்.சி.ஆர்.ஏ பதிவு செய்யப்பட்ட சங்கங்களும், பதிவுச் சான்றிதழைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பம் மறுக்கப்பட்டால், புதுப்பித்தல் விண்ணப்பத்தை மறுத்த தேதியில் சான்றிதழின் செல்லுபடியாகும் காலம் காலாவதியாகிவிட்டதாகக் கருதப்படும். வெளிநாட்டு பங்களிப்பைப் பெறவோ அல்லது பெறப்பட்ட வெளிநாட்டு பங்களிப்பைப் பயன்படுத்தவோ சங்கம் தகுதி பெறாது” என்று உள்துறை அமைச்சகம் அறிவிப்பில் கூறியுள்ளது.

எஃப்.சி.ஆர்.ஏ திருத்தமானது வெளிநாட்டு உதவி பெறும் அனைத்து தொண்டு நிறுவனங்களும் பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) புது டெல்லி கிளையில் கணக்கு தொடங்குவதை கட்டாயமாக்கியுள்ளது. இருப்பினும், வெளிநாட்டவரின் அமைச்சுப் பிரிவின் காரணமாக, தேவையான அனுமதிகளை வழங்குவதில் உள்துறை அமைச்சகத்தின் தாமதத்தால் செயல்முறை தடைபட்டது. “இந்த காரணத்தால்தான் எஸ்பிஐ கணக்கைத் தொடங்கிய இதுபோன்ற தொண்டு நிறுவனங்களின் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் தாமதமாகின்றன” என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Home Ministry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment