Advertisment

78 முஸ்லீம் வேட்பாளர்களில் 24 பேர் மட்டுமே வெற்றி; மக்களவையில் குறைந்து வரும் பிரதிநிதித்துவம்

2019இல் 26 முஸ்லீம் எம்.பி.,க்கள்; இந்த ஆண்டு மக்களவையில் இன்னும் இரண்டு குறைவு; தொடர்ந்து குறைந்து வரும் முஸ்லீம் சமூகத்தின் பிரதிநித்துவம்

author-image
WebDesk
New Update
muslim mps

அசாதுதீன் ஓவைசி, யூசுப் பதான் மற்றும் இக்ரா சவுத்ரி. (ஆதாரம்: PTI மற்றும் Instagram/ iqra.choudhary26)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Rounak Bagchi

Advertisment

2024 மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் போட்டியிட்ட 78 முஸ்லீம் வேட்பாளர்களில், 24 பேர் மட்டுமே வெற்றி பெற முடிந்தது, இந்த எண்ணிக்கை பல ஆண்டுகளாக குறைந்து கொண்டே வருகிறது.

ஆங்கிலத்தில் படிக்க:

2019 இல், 26 முஸ்லீம் வேட்பாளர்கள் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர், காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலா நான்கு பேர், பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சியிலிருந்து தலா மூன்று பேர், மற்றும் தேசியவாத காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து தலா ஒருவர்.

இந்த ஆண்டு, சஹாரன்பூரில் இருந்து காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத் 64,542 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார், கைரானாவிலிருந்து சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் 29 வயதான இக்ரா சவுத்ரி 69,116 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க வேட்பாளர் பிரதீப் குமாரை எதிர்த்து வெற்றி பெற்றார்.

காசிப்பூரில் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அப்சல் அன்சாரி பா.ஜ.க.,வின் பார்ஸ் நாத் ராயை விட ஒரு லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார், அதே நேரத்தில் ஏ.ஐ.எம்.ஐ.எம் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஒவைசி தனது ஹைதராபாத் தொகுதியை தனது நெருங்கிய போட்டியாளரான பா.ஜ.க.,வின் மாதவி லதா கொம்பெல்லாவை விட 3,38,087 வாக்குகள் வித்தியாசத்தில் தக்கவைத்துக் கொண்டார். லடாக்கில், சுயேச்சை வேட்பாளர் முகமது ஹனீபா 27,862 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார், மற்றொரு சுயேச்சை வேட்பாளர் அப்துல் ரஷித் ஷேக் என்ற இன்ஜினியர் ரஷித், ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் 4.7 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

உத்தரப் பிரதேசத்தில் ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் மொஹிப்புல்லா 4,81,503 வாக்குகள் பெற்றும், ஜியா உர் ரஹ்மான் சம்பாலில் 1.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர். ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியை எதிர்த்து 2,81,794 வாக்குகள் வித்தியாசத்தில் தேசிய மாநாட்டு கட்சியின் மியான் அல்தாப் அகமது வெற்றி பெற்றார். ஸ்ரீநகரில் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் அகா சையது ருஹுல்லா மெஹ்தி 3,56,866 வாக்குகள் பெற்றார்.

மேற்கு வங்க மாநிலம் பஹரம்பூர் தொகுதியில், முதல்முறையாக போட்டியிட்ட கிரிக்கெட் வீரர் யூசுப் பதான், 85,022 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் 6 முறை எம்.பி.யாக இருந்தவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை தோற்கடித்து அசத்தினார். சந்தேஷ்காலிக்கு உட்பட்ட பாசிர்ஹாட் தொகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஹாஜி நூருல் இஸ்லாம் பா.ஜ.க வேட்பாளர் ரேகா பத்ராவை கிட்டத்தட்ட இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். உலுபெரியாவிலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சஜ்தா அகமது இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க.,வின் அருணுதாய் பால்சௌத்ரியை வீழ்த்தினார். ஜாங்கிபூரில் திரிணாமுல் கட்சியின் கலீலுர் ரஹ்மான் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் முர்தோஜா ஹொசைன் போகுலைத் தோற்கடித்தார். முர்ஷிதாபாத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தியது, அபு தாஹர் கான் சி.பி.எம் கட்சியின் எம்.டி சலீமை ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் கடந்து சென்றார். மல்தாஹா மேற்கு தொகுதியில் காங்கிரஸின் இஷா கான் சவுத்ரி 1.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க.,வின் ஸ்ரீரூப மித்ரா சவுத்ரியை தோற்கடித்தார்.

லட்சத்தீவில், காங்கிரஸின் முகமது ஹம்துல்லா சயீத், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (ஷரத்சந்திர பவார்) முகமது பைசல் பிபியை வெறும் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

தமிழ்நாட்டின் ராமநாதபுரத்திலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யு.எம்.எல்) வேட்பாளர் நவாஸ்கனி வெற்றி பெற்றார். கேரளாவின் பொன்னானியில், ஐ.யூ.எம்.எல் (IUML) கட்சியின் டாக்டர் எம்.பி அப்துஸ்ஸமத் சமதானி, சி.பி.ஐ(எம்) கட்சியின் கே.எஸ்.ஹம்சாவை தோற்கடித்தார். வடகரையில் காங்கிரஸின் ஷாபி பரம்பில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஷைலஜா டீச்சரை தோற்கடித்தார். மலப்புரம் தொகுதியிலும் ஐ.யூ.எம்.எல் வெற்றி பெற்றது, அங்கு இ.டி முகமது பஷீர் சி.பி.ஐ(எம்) கட்சியின் வி.வசீஃபை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

பீகாரில், காங்கிரஸின் தாரிக் அன்வர் கதிஹாரில் வெற்றி பெற்றார், ஐக்கிய ஜனதா தளத்தின் துலால் சந்திர கோஸ்வாமியை கிட்டத்தட்ட 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கிஷன்கஞ்சில், காங்கிரஸின் முகமது ஜாவேத், ஜே.டி.(யு)வின் முஜாஹித் ஆலமை கிட்டத்தட்ட 60,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

ஏ.ஐ.யு.டி.எஃப் (AIUDF) கட்சியின் கோட்டையான அசாமின் துப்ரி தொகுதியில் காங்கிரஸின் ரகிபுல் ஹுசைனிடம் பதுருதீன் அஜ்மல் தோல்வியடைந்தார்.

இந்த ஆண்டு, பகுஜன் சமாஜ் கட்சி அனைத்துக் கட்சிகளிலும் அதிகபட்சமாக 35 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியது. இவற்றில் பாதிக்கு மேல் (17) உத்திரபிரதேசத்தில், நான்கு மத்திய பிரதேசத்தில், பீகார் மற்றும் டெல்லியில் தலா மூன்று, உத்தரகண்டில் இரண்டு, மற்றும் ராஜஸ்தான், தமிழ்நாடு, மேற்கு வங்காளம், ஜார்கண்ட், தெலுங்கானா மற்றும் குஜராத்தில் தலா ஒன்று.

அடுத்த இடத்தில் காங்கிரஸ் உள்ளது, காங்கிரஸ் 19 முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்கியது, மேற்கு வங்கத்தில் 6 பேர், ஆந்திரப் பிரதேசம், அசாம், பீகார் மற்றும் உ.பி.யில் தலா இருவர், கர்நாடகா, கேரளா, ஒடிசா, தெலுங்கானா மற்றும் லட்சத்தீவுகளில் தலா ஒருவர். திரிணாமுல் காங்கிரஸ் இம்முறை தேர்தலில் அதிக முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்கியதில் மூன்றாவது இடத்தில் உள்ளது, மொத்தம் ஆறு பேர், அவர்களில் ஐந்து பேரை அதன் சொந்த மாநிலமான வங்காளத்தில் நிறுத்தியுள்ளது. அசாமில் ஒரு முஸ்லிம் வேட்பாளரையும் நிறுத்தியுள்ளது.

சமாஜ்வாதி கட்சியின் முஸ்லிம் வேட்பாளர்களில், மூன்று பேர் உ.பி.யில் இருந்தும், நான்காவதாக ஆந்திராவில் இருந்தும் போட்டியிட்டனர். உ.பி.யில் இருக்கும் முஸ்லிம் எம்.பி.களில் ஒருவரான மொராதாபாத்தின் எஸ்.டி.ஹாசனை களமிறக்காமல், இந்து வேட்பாளரான ருச்சி வீராவை சமாஜ்வாதி கட்சி நிறுத்தியது.

ஜம்மு காஷ்மீர் ஒருபுறம் இருக்க, அதிகபட்ச முஸ்லிம் வேட்பாளர்கள் உ.பி (22), அதைத் தொடர்ந்து மேற்கு வங்கம் (17), பீகார் (ஏழு), கேரளா (ஆறு) மற்றும் மத்தியப் பிரதேசத்தில் (நான்கு) அதிகமானோர் போட்டியிட்டனர். மக்கள்தொகையில் முஸ்லீம்களின் பங்கின் அடிப்படையில் அஸ்ஸாம், கடந்த முறை நான்கு முஸ்லீம் வேட்பாளர்களை விட, மூன்று முஸ்லிம் வேட்பாளர்களைக் கொண்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Elections 2024 Muslim
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment