நட்சத்திர பேட்மிண்டன் வீரர் சாய்னா நேவால் சனிக்கிழமையன்று, தாவங்கரே தொகுதியின் பா.ஜ.க வேட்பாளரான காயத்ரி சித்தேஷ்வராவை "பாலியல் கேலி" செய்ததற்காக கர்நாடகாவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் ஷாமனூர் சிவசங்கரப்பாவைச் சாடினார்.
ஆங்கிலத்தில் படிக்க: ‘Misogynistic… least expected’: Saina Nehwal on Karnataka Cong MLA’s ‘belong in kitchen’ remark for BJP nominee
முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய எம்.பி.யுமான சித்தேஸ்வரா ஜி.எம்.மின் மனைவி காயத்ரி, “சமையலறைக்கு தான் தகுதியானவர்” என்று, 92 வயதான, தாவங்கேரே தெற்கு தொகுதியின் எம்.எல்.ஏ., சிவசங்கரப்பா கூறியிருந்தார்.
அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாய்னா நேவால் தனது X பக்கத்தில் “பெண்கள் சமையலறையில் மட்டுமே இருக்க வேண்டும் - இது கர்நாடகாவின் ஒரு உயர்மட்ட தலைவர் ஷாமனூர் சிவசங்கரப்பா ஜி கூறியது. தாவங்கேரே தொகுதி பா.ஜ.க வேட்பாளர் காயத்ரி சித்தேஷ்வரா ஜி மீதான பாலியல் கேலி, லட்கி ஹூன் லாட் சக்தி ஹூன் என்று கூறும் கட்சியிடமிருந்து குறைவாகவே எதிர்பார்க்கப்படுகிறது,” என்று பதிவிட்டுள்ளார்.
“Woman should be restricted to the kitchen"- This is what a top Karnataka leader Shamanur Shivashankarappa ji has said . This sexist jibe at @bjp4india candidate from Davanagere Gayathri Siddeshwara ji is least expected from a party that says Ladki Hoon Lad Sakti Hoon
— Saina Nehwal (@NSaina) March 30, 2024
When I…
2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற 34 வயதான சாய்னா நேவால், நாட்டில் பெண்கள் ஒவ்வொரு துறையிலும் தங்கள் முத்திரையை பதிக்க விரும்பும்போது இதுபோன்ற பெண் வெறுப்பு கருத்துக்கள் வருத்தமளிப்பதாகக் கூறினார்.
"விளையாட்டு மைதானத்தில் பாரதத்திற்காக நான் பதக்கங்களை வென்றபோது, காங்கிரஸ் கட்சி என்ன விரும்பியிருக்கும், நான் என்ன செய்திருக்க வேண்டும்? எல்லா மகளிரும், பெண்களும் அனைத்து துறைகளிலும் சாதிக்க வேண்டும் என்று கனவு காணும் போது ஏன் அப்படி சொல்ல வேண்டும்,” என்று சாய்னா நேவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
“ஒருபுறம் நாங்கள் நாரி சக்தி கோ வந்தன் செய்கிறோம். பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா நமது பிரதமர் மோடியின் தலைமையில் நிறைவேற்றப்பட்டது, மறுபுறம் நாரி சக்தி கா அப்மன் மற்றும் பெண் வெறுப்பு கொண்ட மக்கள்… உண்மையில் வருத்தமளிக்கிறது,” என்று சாய்னா நேவால் எழுதினார்.
சமீபத்தில் மாவட்டத்தில் உள்ள பன்ட்ஸ் பவனில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய சிவசங்கரப்பா சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.
“அவளுக்கு (காயத்ரி) சரியாகப் பேசக்கூடத் தெரியாது. அவள் வீட்டில் உணவு சமைக்கத் தகுதியானவள்,” என்று ஒருமுறை கர்நாடக பிரீமியர் லீக்கில் (கே.பி.எல்) தாவங்கேரே டயமண்ட்ஸ் என்ற அணியை வைத்திருந்த சிவசங்கரப்பா கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.