/tamil-ie/media/media_files/uploads/2017/11/rape.jpg)
கேரளாவில் கடத்தப்பட்ட சிறுமி மீட்கப்பட்டார். போனில் ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய பெண்ணை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் திங்கள்கிழமை (நவ.27) மாலை ஆறு வயது சிறுமி கடத்தப்பட்டார். இவர், சில மணிநேரங்களுக்குப் பிறகு, செவ்வாய்கிழமை நகரத்தில் ஒரு மைதானத்தில் மீட்கப்பட்டார்.
எனினும் கடத்தல்காரர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். திங்கள்கிழமை மாலை 4.30 மணியளவில் தனது வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் காரில் வந்த கும்பலால் சிறுமி கடத்தப்பட்டார்.
சிறுமி தனது 10 வயது மூத்த சகோதரனுடன் டியூசன் படிக்க சென்ற போது கடத்தப்பட்டுள்ளார். இது குறித்து விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டது.
காவல்துறையின் கூற்றுப்படி, கடத்தப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, சிறுமியின் குடும்பத்திற்கு ஒரு பெண்ணிடமிருந்து அழைப்பு வந்துள்ளது.
அந்தப் பெண் சிறுமியை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளார். கொல்லம் பாரிப்பள்ளியில் உள்ள ஒரு வியாபாரியின் தொலைபேசியைப் பெற்றுக் கும்பலைச் சேர்ந்தவர்கள் அழைப்பை மேற்கொண்டுள்ளனர்.
கடத்தப்பட்ட சிறுமியைத் தேடுவதற்காக திங்கள்கிழமை இரவு முதல் பல வாகனங்களை போலீஸார் சோதனை செய்தனர். இது தவிர, ஏராளமான சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.
விசாரணையை தீவிரப்படுத்த கேரள முதல்வர் பினராயி விஜயன் அம்மாநில காவல்துறை தலைவருக்கு உத்தரவிட்டிருந்தார். மேலும். “தவறான தகவல்களை பரப்பக் கூடாது” எனவும் கேட்டிருந்தார்.
ஆங்கிலத்தில் வாசிக்க : Missing 6-year-old Kerala girl found abandoned; abductors yet to be traced
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.