Advertisment

எந்த நாட்டின் உதவியுமின்றி இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டது மிஷன் சக்தி - நிர்மலா சீதாராமன்

தனிப்பட்ட முறையில் இந்த திட்டம் வெற்றி பெற்றதை எண்ணி நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Mission Shakti ASAT missile test Nirmala Sitharaman comments

Mission Shakti ASAT missile test Nirmala Sitharaman comments

Mission Shakti ASAT missile test Nirmala Sitharaman comments : 2014ம் ஆண்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே, இந்தியா செயற்கை கோள் அழிப்பு சோதனையை மேற்கொள்ள முடிவு எடுத்திருந்தது என்று பேச ஆரம்பித்த நிர்மலா சீதாராமன் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த பேட்டி இதோ.

Advertisment

பாதுகாப்புத்துறை அமைச்சராக இருக்கும் நீங்கள் இந்த வெற்றியை எப்படி பார்க்கின்றீர்கள் ?

இது மிகப்பெரும் சாதனை. உலகில் நான்காவது நாடாக இந்த சோதனை முயற்சியில் வெற்றி கண்ட நாடாக இந்தியா உள்ளது. மேலும் முழுக்க முழுக்க இந்தியாவால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் இது. இந்த தொழில்நுட்பத்தை வேறு நாடுகளுக்கு விற்கவோ அல்லது பங்கு செய்து கொள்ளவோ இயலாது.

விண்வெளி ஆராய்ச்சி துறையில் இந்தியா மகத்தான சாதனைகளை புரியத் துவங்கியுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகளோ, இந்த தொழில்நுட்பம் உருவாகி வெகுநாட்கள் ஆகின்றது...

அதிக கனம் கொண்ட செயற்கைகோள்கள், குறைந்த எடை கொண்ட செயற்கை கோள்கள், ஒரே ராக்கெட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட செயற்கை கோள்கள் என்று இதற்கு முன்பும் அனுப்பப்பட்டது தான். ஆனால் விண்ணில் இயங்கிக் கொண்டிருக்கின்ற, 300 கி.மீ அப்பால் உள்ள ஒரு செயற்கைக் கோளை அழிப்பது இதுவே முதல்முறை.

இந்த ஆட்சி முடிவுக்கு வரும் போது ஏசாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டது ஏன் ?

தாமதமாக இந்த அனுமதியை நாங்கள் தரவில்லை. மிகவும் சரியான நேரத்தில் தான் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு முதன்முறையாக அக்னி-வி மிஷைல் விண்ணில் செலுத்தப்படும் போது, டி.ஆர்.டி.ஓவிற்கு ஆண்டி சேட்டிலை மிஷைலிற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த அரசு தான் அதற்கான அனுமதியை டி.ஆர்.டி.ஓவிற்கு அளித்துள்ளது.

பிரதமரே நேரடியாக இந்த அறிவிப்பினை வெளியிட வேண்டிய கட்டாயமென்ன ?

விண்வெளித்துறை அமைச்சர் யார் ? நீங்கள் சொல்லுங்கள்... நான் பாதுகாப்புத் துறை அமைச்சர். அருண் ஜெட்லி நிதி அமைச்சர். விண்வெளித் துறை அமைச்சர் மோடி தானே. இவ்வளவு பெரிய மகத்தான வெற்றியை இந்தியா பெற்றதென்றால் அதை மக்களிடம் அறிவிக்க வேண்டும் தானே. பிரதமர் ஏன் இந்த அறிவிப்பை வெளியிடுகின்றார் என்று மக்கள் கேள்வி எழுப்பினால், இது எவ்வளவு பெரிய சோதனை முயற்சிக்கான வெற்றி என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

மிஷன் சக்தி மூலம் உலகத்திற்கு சொல்ல வேண்டிய செய்தி என்ன ?

எதிர்காலத்தில், போர் என்பது விண்வெளியில் இருக்கும் செயற்கை கோள்களை தாக்கி அழிப்பதாக அமையும் பட்சத்தில், இந்தியா அந்த தொழில் நுட்பத்தில் பின் தங்கிவிடக் கூடாது என்பது தான். தனிப்பட்ட முறையில் இந்த திட்டம் வெற்றி பெற்றதை எண்ணி நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

மேலும் படிக்க : மிஷன் சக்தி என்றால் என்ன ?

Narendra Modi Nirmala Sitharaman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment