/tamil-ie/media/media_files/uploads/2023/08/mizoram-accident.jpg)
மிசோரமில் கட்டுமானப் பணியில் இருந்த ரயில் பாலம் புதன்கிழமை இடிந்து விழுந்ததில் குறைந்தது 17 தொழிலாளர்கள் உயிரிழப்பு
மிசோரமில் ஐஸ்வால் அருகே கட்டுமானப் பணியில் இருந்த ரயில் பாலம் புதன்கிழமை இடிந்து விழுந்ததில் குறைந்தது 17 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, இடிபாடுகளில் மேலும் தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஐஸ்வால் மாவட்டத்தில் உள்ள சாய்ராங் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதையும் படியுங்கள்: தனிநபர் தரவு சட்டம்: விதிவிலக்குகள் தொடங்கும் போது பாதுகாப்புகள் கொண்டு வரப்படும் – மத்திய அமைச்சர்
பிரதமர் நரேந்திர மோடி, மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் X தளத்தில் அறிக்கைகள் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
“மிசோரமில் பாலம் விபத்துக்குள்ளானது வேதனை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன,” என்று பிரதமர் அலுவலகம் கூறியது. மேலும், உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000ம் வழங்கப்படும், என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
VIDEO | At least 17 workers were killed and several others feared trapped after an under-construction railway bridge collapsed near Sairang area of Mizoram, earlier today.
— Press Trust of India (@PTI_News) August 23, 2023
READ: https://t.co/a81kMfQ8Dk
(Source: Third Party) pic.twitter.com/woapGC2yaD
“இந்த சோகத்தால் ஆழ்ந்த வருத்தமும் பாதிப்பும் அடைந்தேன். உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வாழ்த்துகிறேன். மீட்புப் பணிகளில் உதவிய பெருமளவிலான மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று முதல்வர் ஜோரம்தங்கா கூறினார்.
“மிசோரமில் கட்டுமானத்தில் இருக்கும் ரயில்வே பாலம் இன்று சோகமாக இடிந்து விழுந்தது, எங்கள் மால்டா மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் உட்பட பல கட்டுமான பணியாளர்களின் உயிர்களை இழக்க வழிவகுத்த விபத்து பற்றி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். மீட்பு/உதவி நடவடிக்கைகளுக்காக மிசோரம் நிர்வாகத்துடன் ஒரே நேரத்தில் ஒருங்கிணைக்க எனது தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று மம்தா பானர்ஜி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.