பிரதமரின் காணொளி ஆலோசனைக் கூட்டம்: ‘எனக்கு இந்தி புரியவில்லை’ - மிசோரம் முதல்வர் புகார்
பிரதமர் மோடி திங்கள்கிழமை காணொளி மூலம் மாநில முதல்வர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், இந்தியில் பேசியதால் தனக்கு இந்தி புரியவில்லை என்று மிசோரம் மாநில முதல்வர் புகார் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி திங்கள்கிழமை காணொளி மூலம் மாநில முதல்வர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், இந்தியில் பேசியதால் தனக்கு இந்தி புரியவில்லை என்று மிசோரம் மாநில முதல்வர் புகார் கூறியுள்ளார்.
Advertisment
கொரோனா பரவலைத் தடுக்க மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பிரதமர் மோடி திங்கள்கிழமை அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மே 3-ன் தேதிக்கு முன்னதாக பல முதல்வர்கள் தங்கள் கருத்துக்களை தனிப்பட்ட முறையில் பிரதமரிடம் முன்வைக்க வாய்ப்பு பெற விரும்பினர். காணொளியில் பிரதமர் மோடி பேசியபோது, 9 முதல்வர்கள் மட்டுமே பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது பல முதல்வர்களிடையே புழுக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், இதில் முதல்வர்கள் புகார் செய்வது மிகவும் குறைவு. இதற்கு காரணம், தொற்று நோய்க்கு எதிரான தேசிய நடவடிக்கைகளை செயல்படுத்துவது குறித்து பிரதமர் 4 உரையாடல்களிலும், கிட்டத்தட்ட ஒவ்வொரு முதலமைச்சருக்கும் தங்கள் கருத்துகளை முன்வைப்பதற்காக ஒரு முறை நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. முதல்வர்களைப் பொறுத்தவரை, உண்மையான பிரச்சினை மாநிலங்களுக்கு நிதியுதவி தேவையாக உள்ளது. அதற்காக அவர்கள் இன்னும் மத்திய அரசை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
பிரதமரின் வீடியொ கான்ஃபரன்ஸில் இருந்து வெளியே வந்த மிசோரம் முதல்வர் சோரம்தங்காவின் உணர்வு சற்று குழப்பமானது.
மாநிலத்தில் கோவிட்-19 நிலைமை குறித்து பிரதமரின் உரைக்கு பின்னர், பேசுவதற்கு கேட்டுக்கொள்ளப்பட்ட மிசோரம் முதல்வர், யார் பேசியதும் ஒரு வார்த்தைகூட புரியவில்லை என்று கூறினார். ஏனென்றால், அவர்கள் அனைவரும் இந்தியில் பேசுகிறார்கள். எனக்கு இந்தி வார்த்தை புரியவில்லை” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"