Advertisment

மிசோராமில் 3 தசாப்தங்களுக்கு பிறகு புதிய முதல்வர்; யார் இந்த லால்துஹோமா?

மிசோரோமில் ஆட்சியைப் பிடித்த ஜோரம் மக்கள் இயக்கம்; புதிய முதல்வராக பதவியேற்கும் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி லால்துஹோமா; பின்னணி இங்கே

author-image
WebDesk
New Update
lalduhoma

மிசோரம் மாநிலத்தின் புதிய முதல்வராக முன்னாள் ஐ.பிஎ.ஸ் அதிகாரி லால்துஹோமா பதவியேற்க உள்ளார். (புகைப்படம் - முகநூல்)

Sukrita Baruah

Advertisment

நீண்ட மற்றும் புகழ்வாய்ந்த பொது வாழ்க்கைக்குப் பிறகு, முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி லால்துஹோமா மிசோரம் மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார். செர்ச்சிப் தொகுதியில் இருந்து 2,982 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 73 வயதான லால்துஹோமா, முப்பது ஆண்டுகளில் மாநிலத்தின் முதல் புதிய முதல்வர் ஆவார்.

ஆங்கிலத்தில் படிக்க: Mizoram set to get a new CM after three decades: Who is former cop Lalduhoma?

முதல் முறையாக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் புதிய பிராந்தியக் கட்சியான லால்துஹோமாவின் ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM), ஆளும் மிசோ தேசிய முன்னணிக்கு (Mizo National Front (MNF)) எதிராக மகத்தான வெற்றியைப் பெற்று உள்ளது மற்றும் மதியம் 3 மணி நிலவரப்படி 27 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் காங்கிரஸ்- MNF இரட்டை ஆட்சியை ZPM முறியடிக்கிறது, மேலும், 1987 இல் மாநிலம் உருவான பிறகு காங்கிரஸ் அல்லது MNF தவிர வேறு கட்சி ஆட்சிக்கு வருவது இதுவே முதல் முறை. இரு கட்சிகளுக்கு இடையே அதிகாரம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருந்ததால், 1993 முதல் காங்கிரஸின் லால்தன்ஹாவ்லா மற்றும் MNF இன் ஜோரம்தங்கா ஆகியோருக்கு இடையே முதல்வர் பதவி மாறி மாறி வந்தது.

லால்துஹோமாவின் அரசியல்

நார்த் ஈஸ்ட் ஹில் பல்கலைக்கழகத்தில் பி.ஏ பட்டப்படிப்பை முடித்த பிறகு, லால்துஹோமா இந்திய காவல் பணியில் சேர்ந்தார். பணியில் இருந்தபோது, ​​அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் பாதுகாப்புப் பொறுப்பாளராகப் பணியாற்றினார். லால்துஹோமா 1984 இல் ஐ.பி.எஸ் சேவையை ராஜினாமா செய்து காங்கிரஸில் சேர்ந்தார், அந்த ஆண்டின் இறுதியில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1988 ஆம் ஆண்டில், காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்த பிறகு, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முதல் எம்.பி ஆனார். ZPM உருவாவதற்கு முன்பு, அவர் நிறுவிய மற்றொரு கட்சியான ஜோரம் தேசியவாதக் கட்சியிலிருந்து 2003 இல் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ZPM ஆனது 2017 இல் ஆறு சிறிய பிராந்தியக் கட்சிகள் மற்றும் சிவில் சமூகக் குழுக்களின் பொதுவான தளமாகத் தொடங்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது ZPM அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இல்லை. மாறாக, பொது தளத்தில் இருந்த கட்சிகளின் ஆதரவுடன் 38 வேட்பாளர்கள் சுயேச்சையாக போட்டியிட்டனர், அவர்களில் 8 பேர் எம்.எல்.ஏ.க்களாக தேர்வாகினர். இதன் மூலம் சட்டசபையில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. 2019 இல், ZPM ஒரு கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.

2021 இல் செர்ச்சிப் இடைத்தேர்தலில் லால்துஹோமாவின் வெற்றியுடன் ZPM தனது வருகையை அறிவித்தது, சுயேட்சையாக தேர்ந்தெடுக்கப்பட்ட லால்துஹோமா பின்னர் ZPM கட்சியில் "சேர்ந்ததால்" சட்டமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் நடைபெற்ற தேர்தல் இதுவாகும். இந்த வெற்றி மாநிலத்தின் அரசியல் நிலப்பரப்பில் அவரது இருப்பை முத்திரை குத்தியது.

தேர்தல்களுக்கு முன்னதாக, காங்கிரஸ் மற்றும் MNF ஆகிய இரண்டிற்கும் எதிராக பல தசாப்தங்களாக இருந்து வரும் ஆட்சிக்கு எதிரான போக்கை ZPM மற்றும் லால்துஹோமா பெரிதும் பயன்படுத்திக் கொண்டன. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்ததன் மூலம் MNF தனது பிராந்தியத் தன்மையை இழந்துவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர். MNF ஐப் போலவே, ZPM மிசோ அடையாளத்தை வலியுறுத்துகிறது மற்றும் லால்துஹோமாவும் கடந்த காலங்களில் மணிப்பூரின் குக்கி-ஜோமிகளை உள்ளடக்கிய சோ (Zo) இனக்குழுக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளையும் ஒன்றிணைப்பதற்கு ஆதரவாக பேசினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Mizoram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment