MJ Akbar defamation case : கடந்த வருடம் இந்தியாவை உலுக்கிய மிக முக்கிய சம்பவங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது #MeToo இயக்கம். வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக சமூக வலை தளத்தில் குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.
நடிகர்கள், இயக்குநர்கள், திரைப்படத் துறையினர், இலக்கியத் துறையினர் உட்பட பல்வேறு துறையில் நிகழும் பாலியல் சுரண்டல்கள் அம்பலமானது. அனைத்திற்கும் மேலாக ஒரு படி முன்னேறி, அப்போது உள்த்துறை இணை அமைச்சராக பணியாற்றி வந்த எம்.ஜே. அக்பர் மீது தொடர்ச்சியாக பாலியல் புகார்கள் வைக்கப்பட்டன.
MJ Akbar defamation case
இந்த புகார்களை முதலில் வைத்தவர் தி ஏசியன் ஏஜ் பத்திரிக்கையில் ஊடகவியலாளராக பணியாற்றிய ப்ரியா ரமணி. பல்வேறு வழக்குகள் மற்றும் புகார்களைத் தொடர்ந்து தன்னுடைய பதவியை அக்டோபர் 17ம் தேதி ராஜினாமா செய்தார். பெண் பத்திரிக்கையாளர்கள் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த எம்.ஜே. அக்பர், இவர் மீது புகார்கள் கொடுத்த பத்திரிக்கையாளர் ப்ரியா ரமணி மீது மான நஷ்ட வழக்கினை பதிவு செய்தார்.
மேலும் படிக்க : பணியிடங்களில் நடைபெறும் பாலியல் சுரண்டல்களை தடுப்பது எப்படி ?
இந்த வழக்கினை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணை செய்து வருகின்றது. இரு தரப்பு வாதங்களையும் நேரில் கேட்ட நீதிபதி சமர் விஷால், இந்த வழக்கினை வருகின்ற ஜனவரி 29ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.
எம்.ஜே. அக்பர் மற்றும் ஜொயீட்டா பாசு ஆகியோர்களை நீதிமன்றம் விசாரணை செய்த போது, இந்த புகார்களால் தங்களின் மதிப்பும் மரியாதையும் கேள்விக்குறியாக்கப்பட்டது என்றும், பாலியல் வன்கொடுமை என தேவையற்ற, பொய்யான குற்றச்சாட்டுகளை என் மீது சுமத்தியுள்ளனர் என்றும் தன்னுடைய விளக்கத்தை அளித்தார் எம்.ஜே. அக்பர்.
எத்தகைய மான நஷ்ட வழக்குகள் வந்தாலும் சந்திக்க தயார் என்று முன்பே அறிவித்திருந்தார் ப்ரியா ரமணி.
மேலும் படிக்க : எம்.ஜே. அக்பர் விவகாரம் : சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு தயாராகவே இருக்கிறோம் – பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்