தி.மு.க தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க. கடந்த மார்ச் 1ம் தேதி தனது 70வது வயதில் அடியெடுத்து வைத்தார். அவர் தனது பிறந்த நாள் விழாவை தனது குடும்பத்தினருடன் எளிமையாக கேக் வெட்டி கொண்டாடினார். இருப்பினும், தி.மு.க-வினர் பெரும் விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர். சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு தனது பிறந்தநாள் கூட்டத்தில் பங்கேற்றார் ஸ்டாலின்.
இந்தக் கூட்டத்திற்கு அகில இந்தியத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், காஷ்மீரின் தேசிய மாநாட்டுத் தலைவர் ஃபரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதல்வரும் இராச்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ், இந்திய தேசிய காங்கிரஸின் தற்போதைய தலைவராக உள்ள மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் ஸ்டாலினும் பிரதமராகும் தகுதியை உடையவர் என்று கருத்துத் தெரிவிக்கும் வகையிலும், நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்று சேர வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் குரல் எழுப்பப்பட்டது.
அவ்வகையில், எதிர்க்கட்சி முகாமில் உள்ள மிகவும் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளில் ஒன்றாக தி.மு.க இருக்கிறது. முக்கிய எதிர்கட்சிகளும் அவர்களுடன் கூட்டணி வைக்க விரும்புகின்றனர். இருப்பினும், ஸ்டாலின் மற்றும் அவரது தலைமையிலான திமுக தேசிய அளவில் எத்தகைய பங்கை கொண்டுள்ளன என்பதை அலசுவது அவசிமாகிறது.
தி.மு.க.வினரும், கட்சியின் துணை தேசியவாத சித்தாந்தத்தின் விசுவாசிகளும் "இல்லை" என்று வலியுறுத்துகின்றனர். பாரத ராஷ்டிர சமிதியின் கே சந்திரசேகர ராவ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி போன்ற வலிமைமிக்க வாக்கு வங்கிகளைக் கொண்ட மற்ற முதல்வர்களைப் போலல்லாமல், ஸ்டாலின் தமிழகத்தில் தி.மு.க ஆதிக்க சக்தியாக இருப்பதை உறுதி செய்வதில் மட்டுமே அக்கறை காட்டுகிறார் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
மேலும், தமிழகத்தில் அவரது நிலைப்பாட்டில் இருந்துதான் அவர் தனது அதிகாரங்களையும், கட்சியின் அதிர்ஷ்டத்தையும் ஈர்த்துக்கொண்டார் என்றும் கூறுகின்றனர். தங்கள் கட்சிக்காரர்கள் மத்தியில் ஆட்சியில் சேர்ந்தாலும் கூட, மாநிலத்தில் உள்ள பிராந்திய தலைவர்கள் டெல்லியில் இருந்து வேண்டுமென்றே தூரத்தை கடைபிடித்த வரலாற்றையும் திமுக-வினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
2024 பொதுத்தேர்தலுக்கு எந்த ஒரு கூட்டு-எதிர்க்கட்சி உருவாவதிலும் ஸ்டாலின் முக்கியப் பங்காற்றுவார் என்றாலும், அவரது நம்பிக்கைக்குரியவர்களின் கூற்றுப்படி, அது ஒரு வசதியாளராக இருக்க வாய்ப்புள்ளது என்கின்றனர். கே.சி.ஆர் மற்றும் சிபிஐ(எம்)ன் கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்ட தலைவர்களுடனான அவரது நட்புறவு, தெற்கில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் (UPA) ஒரு வகையான ஒருங்கிணைப்பாளராக வெளிவர அவருக்கு உதவக்கூடும்.
ஸ்டாலினின் நெருங்கிய அரசியல் கூட்டணி கட்சித் தலைவரான விடுதலை சிறுத்தைகளின் தொல்.திருமாவளவன் பிறந்தநாள் கூட்டத்தில் அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள பரிந்துரை செய்தார்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சமாஜ்வாதி கட்சி (எஸ்பி) தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மற்றும் ஃபரூக் அப்துல்லா முன்னிலையில், ஒரு முக்கியமான செய்தியை அனுப்பினார். "மூன்றாவது அணி" பற்றி பேசுவதை விட, அதாவது காங்கிரஸ் அல்லாத முன்னணி உருவாகுவதை விட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். மேலும், 2024-ல் சவாலானது யார் வெற்றி பெறுவது என்பது அல்ல, மாறாக யார் வெற்றி பெறக்கூடாது என்பதுதான் என்பதை அனைவரும் உணர வேண்டும் என்றும் கூறினார்.
தேசிய அளவில் முக்கியத்துவம் பெறத் துடிக்கும் கட்சினருக்கும், காங்கிரஸுக்கு எதிரான போக்கு கொண்ட பிராந்திய தலைவர்களுக்கும் இது ஒரு முக்கிய செய்தி என்றால், ஸ்டாலின் காங்கிரஸுக்கும் ஒரு செய்தியை அனுப்பினார். சில நாட்களுக்கு முன்பு, வடகிழக்கில் ஒரு தேர்தல் பேரணியில், கார்கே காங்கிரஸ் "எந்தவொரு எதிர்க்கட்சி கூட்டணியையும் வழிநடத்தும்" என்று பேசினார். தமிழக கூட்டத்தில், யார் தலைமை தாங்குவது அல்லது பிரதமராவது என்பது பற்றி தான் ஒருபோதும் பேசவில்லை என்று கார்கே கூறினார்.
ஸ்டாலின் தேசியப் பொறுப்பை ஏற்கத் தீர்மானித்தால், தற்செயலாக தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தலைவரை அவர் உதாரணமாகப் பார்க்க முடியும்: அவர் தான் மறைந்த காங்கிரஸ் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கே.காமராஜ்.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் போற்றப்பட்ட காமராஜர் தனது அரசியல் ஆளுமைக்கும் மற்றும் கட்சிகளைக் கடந்த நண்பர்களுக்காகவும் பெரிதும் அறியப்பட்டவர். காங்கிரஸ் நெருக்கடியில் இருந்தபோதெல்லாம் அவர் எடுத்த முடிவுகள் அதிக முக்கியத்துவம் பெற்றன. ஒரு காலத்தில் பிரதம வேட்பாளராக கருதப்பட்ட அவர், அதற்கு பதிலாக தன்னை கிங்மேக்கராக விரும்பினார். அவரை அச்சுறுத்தலாகக் கண்ட முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, காமராஜரை ஒதுக்கி வைத்தார். அவருக்கு காமராஜர் போட்ட சவால் இன்னும் ஹீரோவாகவும் பலருக்கும் தெரிந்த பெயராகவும் இருக்கிறது.
காமராஜரைப் போலல்லாமல், தனது வாழ்நாளின் பல ஆண்டுகளை டெல்லியில் ஸ்டாலின் செலவழித்ததில்லை, நீண்ட காலமாக தனது தந்தையின் நிழலில் பணியாற்றினார். 70 வயதில், புதிய நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வதற்கான நேரம் அவருக்குப் பக்கத்தில் இல்லை. எனினும், காமராஜரைப் போல் அவரும் சில அரசியல் போர்களில் வெற்றி பெற்றுள்ளார்.
மொழிவாரியாக மாநில எல்லைகள் மறுசீரமைக்கப்பட்டபோது தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்க போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டிய மா.போ சிவஞானம் அல்லது மா.போ.சி போன்ற தலைவர்களுக்கு எதிராக காமராஜர் போராட வேண்டியவர்களும் இதில் அடங்கும். இது, காமராஜருக்கு மேலும் தேசியப் பிம்பத்தைப் பெற உதவியது.
தேசிய அரசியலில் நுழையத் தயாரா என்று அவரது பிறந்தநாளில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ஸ்டாலின் தற்செயலாக கேள்வியை திசை திருப்பினார். 'பொதுமக்கள் கருத்தைப் பொருட்படுத்தாமல் ஏற்கனவே தேசிய அரசியலில் தான் இருக்கிறேன் என்றும் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.