புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குள்பட்ட துறைமுகத்தில் கடந்த மாதங்களாக சிறிய வகையில் இருந்து பெரியவகை சரக்கு கப்பல்கள் வந்து போய்க்கொண்டே இருக்கின்றன.
தற்போது பெரிய அளவிலான சரக்கு கப்பல் ஒன்று துறைமுகத்தில் வந்துள்ளது. அதனை உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது கப்பல் கேப்டன், துறைமுக செயற்பொறியாளர் விஜயகுமார் அவர்களும் உடனிருந்தனர். அப்போது எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி, “இதுபோன்று அதிகப்படியாக சரக்கு கப்பல் போக்குவரத்து நிலுவையில் இருந்தால் அரசுக்கும் லாபம்; என் தொகுதிக்கு உள்பட்ட இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு அமையும்” என்றார்.
மேலும், “முகத்துவாரங்கள் தூர்வாரப்பட்டு சரியான முறையில் பராமரிப்பில் இருந்து வருகிறது. ஆயினும் உப்பளம் தொகுதி உட்பட்ட துறைமுகத்தில் சரக்கு கப்பல் வருவதற்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தற்போது நான் வந்த பின்னர் சரக்கு கப்பல்கள் வருவதற்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறேன்” என்றார்.
இந்த ஆய்வின் போது தொகுதி செயலாளர் சக்திவேல், துணைச் செயலாளர் ஆரோக்கியராஜ், கிளைச் செயலாளர் ராகேஷ் மற்றும் தொகுதி இளைஞர் அணி மரி ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“