ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பச்சிக்கப்பள்ளம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் ஒன்று நடைபெற்று வருகிறது. புஷ்பகுமாரி என்ற சிறுமியும் அந்த குழந்தைகள் நலக்காப்பகத்தில் வசித்து வரும் ஒரு குழந்தையாவார். அவருக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாகும். அவர் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று நீட் தேர்விலும் தகுதி பெற்றார்.
ஆனால் மருத்துவக் கல்லூரியில் சேர போதுமான நிதி வசதி இல்லாத நிலையில் அவரால் மருத்துவக் கல்லூரியில் சேர இயலவில்லை.இந்த ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தை நடத்தி வந்த குழுவினர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் உள்ள எம்.எல்.ஏவும் நடிகையுமான ரோஜாவை அணுகினர்.
மேலும் படிக்க :பாஜக இரட்டை இலக்கத்தை தாண்டினால் ட்விட்டரை விட்டு வெளியேறுகிறேன்; பிரசாந்த் கிஷோர் சவால்
அங்கு அவர்களின் தேவைகளை கேட்டறிந்த எம்.எல்.ஏ ரோஜா, அந்த சிறுமிக்கு உதவ முன்வந்துள்ளார். புஷ்புகுமாரியின் கனவை நிறைவேற்றுவதாக வாக்களித்த ரோஜா, அவரை நேரில் சென்று சந்தித்து உறுதி அளித்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் படிப்பு செலவை முழுக்க முழுக்க ரோஜா ஏற்றுக் கொள்ள இருப்பதாக தெரிய வந்துள்ளது.
அரசியல்வாதியாக பல்வேறு தருணங்களில் மக்களுக்கு பல்வேறு நலன்களை ரோஜா செய்து வருகிறார். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை அவருக்கு பெற்றுத்தந்துள்ளது. எம்.எல்.ஏ ரோஜாவுக்கு புஷ்பகூமாரி தன்னுடைய நன்றியை பதிவு செய்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil