/tamil-ie/media/media_files/uploads/2018/07/Cow-Vigilantes.jpg)
Cow Vigilantes
சமீப காலமாக குழந்தைக் கடத்தல், பசு பாதுகாப்பு, வாட்ஸ்ஆப் வந்தந்திகள் என்ற பெயரில் பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.
வெறும் வாட்ஸ்ஆப் செய்திகளை குருட்டுத் தனமாக நம்பி, இந்தியாவில் இதுவரையில் 25 நபர்களை மக்கள் அடித்தே கொன்றுவிட்டார்கள்.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் சந்த்ரசுட், கான்வில்கர் அடங்கிய அமர்வு, இதனை விசாரித்து “நாட்டில் வன்முறை தாக்குதல்களை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள இயலாது. சட்டம் மற்றும் ஒழுங்கினை காப்பது அரசின் கடமை” என்று கூறியுள்ளது.
இனி வரும் காலங்களில் இப்படியான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க புதிய சட்டத்தினை உருவாக்க வேண்டும் என பாராளுமன்றத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது உச்ச நீதிமன்றம்.
கூட்டமாக சேர்ந்து வன்முறையில் ஈடுபட்டு, நீதியினை கையில் எடுத்துக் கொண்டு செயல்படுதல் ஒரு கலாச்சராமாக மாறிவிடக் கூடாது என்றும் கூறியுள்ளார் தீபக் மிஸ்ரா.
குறிப்பாக பசு பாதுகாப்பு தொடர்பாக நடத்தப்படும் தாக்குதல்கள் அனைத்தும் மிக விரைவில் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இது போன்ற தாக்குதல்கள் நடக்கும் போது மாநில அரசு சிறிதும் காலம் தாழ்த்தாமல் உடனடி நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்றும், இது குறித்து முறையான சட்டங்களை பின் தொடர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது உச்ச நீதிமன்றம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.