மத்திய பிரதேசத்தில், அம்பேத்கர் சிலை தாக்கப்பட்டதைத் தொடர்ந்து தலித் சமூகத்தை சேர்ந்த கிராம மக்களும் அவமதிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் 3 பேரை கைது செய்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் உள்ள பர்கிதா குர்மி கிராமத்தில், இந்த மாத ஆரம்பத்தின்போது, இந்து மத ஊர்வலம் நடைபெற்றது. இந்நிலையில் இந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர், இந்து மத பூசாரி கையில் ஏந்திய அனுமன் கொடியை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது, மேலும் அந்த பூசாரியை தாக்கியதாவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இதற்கு பழி தீர்க்கும் வகையில், ஒரு கும்பல் சம்மந்தப்பட்ட நபரின் வீடுகளை தாக்கியது. மேலும் அவரது வீடுகளின் மேலே காவிக் நிறக் கொடியை கட்டியுள்ளது.
இது தொடர்பாக காவல்துறை அதிகாரி, உஷா மரவி கூறுகையில் “ அந்த கும்பலில் பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்தவர்களும் இருந்ததாக தெரிகிறது. பூசாரியை தாக்கியதாலும், அனுமன் கொடியை சேதப்படுதியதாலும் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளோம்” என்று அவர் கூறினார்.
இந்நிலையில் சமந்தப்பட்ட இடத்தில் உள்ள தலித் உரிமைகளுக்காக போராடும் அமைப்பைச் சேர்ந்த பீம் யுவ சங்கதன் இது தொடர்பாக கூறுகையில் “ அம்பேத்கர் கொடியை கிராமத்தின் நிழைவாயில் முன்பு வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கிராம பஞ்சாயத்துதான், அம்பேத்கர் சிலை வைக்க வேண்டும் என்று முடிவு செய்தது. நாங்கள் எல்லோரின் அனுமதியும் பெற்றுதான் இதை செய்தோம். ஆனால் அம்பேதகர் சிலை அமைத்ததுதான் இப்போது இந்த பிரச்னைக்கு காரணமாக அமைகிறத” என்று அவர் கூறினார்.
இந்நிலையில் ஊர்வலத்தில் கலந்துகொண்ட நபர்களில் 5 பேர்தான் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது, இதை தடுக்கு முயன்ற கிராம மக்களை, சாதி பெயர் சொல்லி இழிவுப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் தீரஜ் பட்டிதர் கூறுகையில் “அஜய் ராத்தோர் மற்றும் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், சிலையை தாக்கி உள்ளனர். நான் அந்த கும்பலுக்கு எதிராக செயல்பட்டேன். அந்த கும்பலை சேர்ந்த பெரும்பான்மையானவர்கள் வெளியூரைச் சேர்ந்தவர்கள் . அம்பேத்கருக்கு எதிராக நாங்கள் செயல்படவில்லை “ என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“