Mobile internet services restored in Kargil : லடாக் யூனியன் பிரதேசத்தில் இருக்கும் கார்கிலில் 145 நாட்களுக்கு பிறகு இணைய சேவை மீண்டும் தரப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக அம்மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள், தடுப்பு காவல்கள், இணைய சேவை முடக்கங்கள் மற்றும் தொலைத்தொடர் சேவை முடக்கங்கள் ஆகியவற்றை மத்திய அரசு அமல்படுத்தியது. மேலும் ஆயிர கணக்கில் துணை ராணுவ வீரர்கள் ஜம்மு காஷ்மீருக்கு அனுப்பப்பட்டனர்.
லடாக்கின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது மத்திய அரசு. அங்கே பணியில் அமர்த்தப்பட்ட 7000 துணை ராணுவ வீரர்கள் திரும்ப பெறப்பட்டனர். கடந்த மாதம் ராஜ்யசபையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணைய சேவைகள் திரும்பப் பெறப்படும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று, 145 நாட்கள் கழித்து இன்று லடாக்கின் கார்கிலில் மட்டும் இணைய சேவைகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால் ஜம்மு காஷ்மீர் மாநில தலைவர்களின் தடுப்புக் காவல்களில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது. இது குறித்தும், அத்தலைவர்களின் விடுதலை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்ட போது அமித் ஷா, மெகபூபா முஃப்தி உட்பட அனைவரும், அம்மாநில நிர்வாகம், மத்திய அரசின் எவ்வித இடையூறுமின்றி விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவித்தார்.
மேலும் படிக்க : ஜம்மு காஷ்மீர் : உழைக்கும் மக்களை குறிவைக்கும் பயங்கரவாதம்