மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற பிறகு, பிரதமர் அலுவலக ஊழியர்களிடம் தனது முதல் உரையில், நரேந்திர மோடி, “பிரதமர் அலுவலகத்தை ஒரு சேவை நிறுவனமாகவும், மக்களின் பிரதமர் அலுவலகமாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் தொடக்கத்தில் இருந்தே முயற்சி செய்து வருகிறேன்” என்று கூறினார்.
மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற நிலையில், பிரதமர் அலுவலக ஊழியர்கள் இடையே பிரதமர் மோடி திங்கள்கிழமை பேசினார். அப்போது அவர், “நான் பணியாற்றுவதற்காக பிறந்தவன், ஓய்வு எடுப்பதற்காக அல்ல; பிரதமர் அலுவலகம் மக்களுக்கான அலுவலகமாக இருக்க வேண்டுமே தவிர மோடிக்கான அலுவலகமாக இருக்கக் கூடாது” என்று பேசியுள்ளார்.
மேலும், நரேந்திர மோடி, “பிரதமர் அலுவலகத்தை ஒரு சேவை நிறுவனமாகவும், மக்களின் பிரதமர் அலுவலகமாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் தொடக்கத்தில் இருந்தே முயற்சி செய்து வருகிறேன்” என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து, பிரதமர் மோட் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையடுத்து, புதியதாக மத்திய அமைச்சர்களாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“