Advertisment

ஒரு மாதத்திற்கு டிஜிட்டல் பரிவர்த்தனை; நாட்டு மக்களுக்கு மோடி அறிவுறுத்தல்

ஒரு மாதத்திற்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மட்டும் செய்யுங்கள்; ரொக்க பரிவர்த்தனையை தவிருங்கள்; மான் கி பாத் உரையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

author-image
WebDesk
New Update
pm modi

ஒரு மாதத்திற்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மட்டும் செய்யுங்கள்; ரொக்க பரிவர்த்தனையை தவிருங்கள்; மான் கி பாத் உரையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

'டிஜிட்டல் இந்தியா'வை நோக்கி முன்னேறும் முயற்சியில், பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான டிஜிட்டல் கட்டண முறைகள் மற்றும் யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (யு.பி.ஐ) பயன்பாடுகளை அதிகம் மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களை வலியுறுத்தினார்.

Advertisment

தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்திய குடிமக்களை "யு.பி.ஐ பரிவர்த்தனைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தீபாவளியின் போது பண பரிவர்த்தனைகளின் மீதான நம்பகத்தன்மை கணிசமாக குறைந்துள்ளது என்று கூறினார்.

மான் கி பாத் நிகழ்ச்சியின் 107வது பதிப்பில், உரையாற்றிய பிரதமர் மோடி, "கடந்த மாதங்களில் UPI பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன, வரவிருக்கும் மாதத்தில் UPI மூலம் மட்டும் பரிவர்த்தனைகள் செய்து உங்கள் அனுபவத்தைப் பற்றி எனக்கு எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.

மேலும் கூறுகையில், "தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தீபாவளியின் போது மக்கள் ரொக்கப் பணம் செலுத்துவதைக் குறைத்துள்ளனர். இதன் மூலம் மக்கள் தற்போது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மேலும் மேலும் நம்பியுள்ளனர்" என்று கூறினார்.

"ஒவ்வொருவரும் தங்கள் பரிவர்த்தனைகளுக்கு ஒரு மாதத்திற்கு UPI ஐத் தவிர வேறு எதையும் பயன்படுத்த மாட்டோம் என்று இந்த உறுதிமொழியை எடுக்க வேண்டும், ரொக்க பரிமாற்றத்தை தவிர்க்க வேண்டும். இந்தியாவின் டிஜிட்டல் முன்னேற்றங்கள் இதை சாத்தியமாக்கி அனைவருக்கும் அணுகக்கூடியதாக ஆக்கியுள்ளது" என்று பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் தனது கருத்துக்களில், சமீபத்திய பண்டிகைகளின் போது சுமார் ரூ.4 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெற்றதாகவும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதற்கு மக்களிடையே மிகுந்த உற்சாகம் காணப்படுவதாகவும் கூறினார்.

மேலும் பேசிய மோடி, ”தூய்மை பாரதம் இயக்கத்தின் வெற்றி எப்படி அதற்கே ஒரு ஊக்கமாக ஆகியிருக்கிறது. அதே போல, உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் இயக்கத்தின் வெற்றி, வளர்ந்த பாரதம்- தன்னிறைவான பாரதத்திற்கான கதவுகளை அகலத் திறந்து வைத்துள்ளது. உள்ளூர்ப் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற இந்த இயக்கம், ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்திற்கு பலம் சேர்க்கிறது.

உள்ளூர்ப் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் இயக்கம் வேலைவாய்ப்பிற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இது வளர்ச்சிக்கான உத்தரவாதம், இது தேசத்தின் சரிசமமான வளர்ச்சிக்கான உத்தரவாதம். இதனால் நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளிலும் சமமான சந்தர்ப்பங்கள் வாய்க்கும். இதன் வாயிலாக, வட்டார உற்பத்திப் பொருட்களின் மதிப்புக் கூட்டலுக்கான பாதையும் பிறக்கிறது. ஒருவேளை உலகப் பொருளாதாரத்தில் ஏற்றம்-வீழ்ச்சி வருமானால், உள்ளூர்ப் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற மந்திரம், நமது பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் செய்கிறது.

பாரத நாட்டு உற்பத்திப் பொருட்களில் இந்த உணர்வு, பண்டிகைகளோடு மட்டும் நின்று போய் விடக்கூடாது. அடுத்து திருமணக் காலம் தொடங்கியாகி விட்டது. சில வணிகச் சங்கங்களின் அனுமானம் என்னவென்றால், திருமணங்களின் இந்தக் காலத்தில் கிட்டத்தட்ட 5 இலட்சம் கோடி ரூபாய் வியாபாரத்திற்கான சாத்தியக்கூறு உள்ளது. திருமணங்களோடு தொடர்புடைய வாங்குதலிலும் கூட, நீங்கள் அனைவரும் பாரதநாட்டுப் பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.இவ்வாறு மோடி உரையாற்றினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pm Modi India Digital India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment