/tamil-ie/media/media_files/uploads/2018/05/modi-bajans.jpg)
நேபாளம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள சீதா தேவியின் ஆலயத்தில் பஜனை செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இன்று நேபாளம் புறப்பட்டு சென்றார். காலை 10.47 மணி அளவில் நேபாளம் சென்றடைந்த அவரை, அந்நாட்டுப் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி வரவேற்றார். இந்தப் பயணத்தின் முதற்கட்டமாக மோடி, நேபாளத்தில் உள்ள சீதா தேவியின் ஆலயத்திற்குச் சென்றார்.
பலத்த பாதுகாப்புடன், சீதா தேவி ஆலயத்திற்குச் சென்ற மோடி, சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்றார். அக்கோவிலில் பக்தர்கள் பஜனை தினசரி பக்தி பஜனை செய்வது வழக்கம். இதே போல இன்றும் அங்கு பஜனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது கோவிலை வலம் வந்த மோடி, பக்தர்களுடன் இணைந்து பஜனையில் ஈடுபட்டார். பக்தர்களிடம் இருந்து இசைக் கருவியை தான் பெற்றுக்கொண்டு, வாசித்தார் மோடி. பக்தி பரவசத்தில் அவர்களுடன் சேர்ந்து 'விட்டலா விட்டலா' என்று பாடல் பாடினார்.
,
#WATCH Prime Minister Narendra Modi played musical instrument during his visit to Janki temple in Nepal's Janakpur pic.twitter.com/q99Nvs5dV3
— ANI (@ANI) May 11, 2018
இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.