பிரதமர் மோடி, பிரிட்டன் வனவிலங்கு ஆர்வலர் பேர் கிரில்சுடன் இணைந்து பங்கேற்ற மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில், நேற்று ( 12ம் தேதி) ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சி, இந்தியாவில் மட்டுமல்லாது 180 சர்வதேச நாடுகளிலும் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சிக்கு, மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்தது.
நாட்டில் என்ன நிகழ்ச்சி, நிகழ்வு, சம்பவம் என எது நடந்தாலும். அதை நகைச்சுவையாகவோ, கேலிக்கிண்டலாகவோ சித்தரித்து மீம்ஸ்களாக வெளியிடுவதுதான் தற்போது நெட்டிசன்களின் தலையாய பணியாக உள்ளது. டிஸ்கவரி சேனலில், மோடி பங்கேற்ற மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியும், நெட்டிசன்களின் பார்வையிலிருந்து தப்பவில்லை.
இந்த நிகழ்ச்சி குறித்து வெளியாகியுள்ள மீம்களின் தொகுப்பு
உரி படத்தில் விக்கி கவுசல் 'How's the Josh' என்று வசனம் பேசுவார். Josh- நல்ல இயல்புடையவர்.
இதைகொண்டு டுவிட்டீரா என்பவர் வெளியிட்டுள்ள மீம்....
மோடி பங்கேற்ற நிகழ்ச்சியால் டிஸ்கவரி சேனலின் டிஆர்பி இவ்வாறு உயரும் எனும் மீம்
மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில், மோடி - பேர் கிரில்ஸ் இடையேயான உரையாடலின்போது, மோடி பெரும்பாலும் இந்தியிலேயே பேசினார். அது, கிரில்சை மட்டுமல்லாது, அந்த நிகழ்ச்சியை பார்த்த நமக்கும் குழப்பத்தையே விளைவித்தது.
அதுதொடர்பான சில டுவிட்கள்...
இந்த நிகழ்ச்சியின் இறுதியில், பிரதமர் மோடி, நான் 18 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் வெகேசனிற்கு வந்துள்ளேன். இந்த அனுபவம் இனிமையான அனுபவமாக இருந்தது. இந்த நிகழ்ச்சி, என் வாழ்நாளில் இனிய தருணமாக அமைந்திருந்ததாக தெரிவித்திருந்தார். இந்த நிகழ்ச்சியை, தான் மிகவும் ரசித்து செய்ததாக கூறியிருந்ததும், நெட்டிசன்கள், மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு செம தீனியாக அமைந்திருந்தது.