பிரதமர் மோடி, 5 நாள் அரசு முறை பயணமாக இன்று தில்லியில் இருந்து ஸ்வீடன் புறப்பட்டார். இந்த 5 நாள் பயணத்தில் பிரிட்டன் செல்ல உள்ளார்.
,
தில்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட மோடி, ஸ்வீடனின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் நாளை நடைபெற உள்ள இந்தோ - நார்டியாக் மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இந்த மாநாடு சுவீடன், நார்வே, பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கியதாகும். பின்னர் ஸ்வீடனின் உள்ள தலைவர்களை சந்தித்து, இந்தியாவுடனான வர்த்தகம், சுற்றுச்சூழல், எரிசக்தி உள்ளிட்டவற்றை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
ஸ்வீடனில் ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பின்னர் அங்கிருந்து புறப்பட்டு லண்டன் செல்கிறார். லண்டனில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
பின்னர் வரும் 18ம் தேதி இங்கிலாந்து பிரதமர் தெரசா மே வை சந்தித்து இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துகிறார். இந்தச் சந்திப்பில், பிரிவினைவாதம், எல்லைதாண்டிய பயங்கரவாதம், விசா மற்றும் குடியேற்றம் தொடர்பாக அவர்கள் விவாதிக்கின்றனர். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே 10-க்கும் மேற்பட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து லண்டன் டவுன் ஹாலில் நடைபெறும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் கூட்டத்தில் பங்கேற்று மோடி உரையாற்ற உள்ளார். இந்தக் கூட்டத்தில், ஸ்வீடனின் வசிக்கும் 20 ஆயிரத்திற்கும் மேலான இந்தியர்கள் பங்கேற்கின்றனர்.