Advertisment

வெண்டிலேட்டர்கள் பயன்பாடு குறித்து தணிக்கை செய்யுங்கள்; அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு

In Covid review meet, PM calls for audit of installation, operation of ventilators provided to states: சில மாநிலங்களில் வென்டிலேட்டர்கள் பயன்படுத்தப்படாமல் கிடப்பது குறித்த அறிக்கைகளை கவனத்தில் கொண்டு, மத்திய அரசு வழங்கிய வென்டிலேட்டர்களை நிறுவுதல் மற்றும் செயல்படுத்துவது குறித்து உடனடியாக தணிக்கை செய்யுமாறு பிரதமர் உத்தரவிட்டார்

author-image
WebDesk
New Update
வெண்டிலேட்டர்கள் பயன்பாடு குறித்து தணிக்கை செய்யுங்கள்; அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு

நாட்டின் கொரோனா நிலைமையை கட்டுப்படுத்த, சனிக்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கிய உயர்மட்டக் கூட்டத்தில், சில மாநிலங்களில் வென்டிலேட்டர்கள் பயன்படுத்தப்படாமல் கிடப்பது குறித்த அறிக்கைகளை கவனத்தில் கொண்டு, மத்திய அரசு வழங்கிய வென்டிலேட்டர்களை நிறுவுதல் மற்றும் செயல்படுத்துவது குறித்து உடனடியாக தணிக்கை செய்யுமாறு பிரதமர் உத்தரவிட்டார். கொரோனா பாதிப்பு விகிதம் அதிகமாக உள்ள பகுதிகளில் உள்ளூர்மயமாக்கப்பட்ட கட்டுப்பாட்டு உத்திகள் தேவை என்பதையும் மோடி வலியுறுத்தினார்.

Advertisment

"ஒழுங்காக இயங்கும் வென்டிலேட்டர்களுக்கான புத்துணர்ச்சி பயிற்சி தேவைப்பட்டால் சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார்," என்று ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் ஆக்ஸிஜன் செறிவூட்டல் கருவிகளை வழங்குவது உட்பட ஆக்ஸிஜன் வழங்கலை உறுதி செய்வதற்கான விநியோக திட்டத்தை வகுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். மேலும் "இதுபோன்ற உபகரணங்களை இயக்குவதில் சுகாதார ஊழியர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும், அத்தகைய மருத்துவ சாதனங்களை சீராக இயக்குவதற்கு மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்" என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிக கொரோனா பாதிப்பு விகிதத்தை பதிவு செய்யும் பகுதிகளில் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறினார். "அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகளையும், எந்தவொரு அழுத்தமும் இல்லாமல் அவர்களின் எண்ணிக்கையை வெளிப்படையாக தெரிவிக்க மாநிலங்களை ஊக்குவிக்க வேண்டும். வீட்டுக்கு வீடு சோதனை மற்றும் கண்காணிப்பில் கவனம் செலுத்த கிராமப்புறங்களில் சுகாதார வளங்களை அதிகரிக்க பிரதமர் கேட்டுக் கொண்டார். ஆஷா மற்றும் அங்கன்வாடி தொழிலாளர்களுக்கு தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் மேம்படுத்துவது குறித்தும் அவர் பேசினார், ”என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தின் போது, ​​நாடு முழுவதும் சோதனைகள் கணிசமாக அதிகரித்துள்ளன என்று பிரதமருக்கு அறிவிக்கப்பட்டது. மார்ச் மாத தொடக்கத்தில் வாரத்திற்கு சுமார் 50 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில் இப்போது வாரத்திற்கு 1.3 கோடி பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

மேலும், தடுப்பூசி தொடர்பாக, நாடு முழுவதும் தடுப்பூசி இயக்கங்களை விரைவுபடுத்த மாநில அரசுகளுடன் நெருக்கமாக பணியாற்றுமாறு பிரதமர் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pm Modi Corona Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment