திரிபுரா மாநிலத்தின் முதல்வர் பிப்லாம் குமார் தேப் சமீப காலமாக தொடர்ந்து சர்ச்சைக்குரிய பேச்சுகளில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக மகாபாரத காலத்திலேயே இணையதளம் வசதி மற்றும் செயற்கோள்களும் இருந்தன என்று கூறியிருந்தார். இதனைப் பலரும் வேடிக்கையாகக் கருதினர். மற்றும் பலர் இதனை பின்னடைந்த சிந்தனையாகவும், அவரின் அறிவுத்திறன் குறித்தும் கருத்துகள்தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக, இப்போது மற்றுமொரு கருத்தை பிப்லாம் தேப் வெளியிட்டுள்ளார். அதில், படித்த இளைஞர்கள் வேலை தேடி அரசியல்வாதிகள் பின்னால் செல்லாமல், பீடா கடை வைத்துப் பிழைக்கலாம் அல்லது மாடு மேய்க்க்ய்ம் தொழில் செய்யலாம் என்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். இதனால் பெரும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
,
இந்நிலையில், மே மாதம் 2-ஆம் தேதி டெல்லி வந்து மோடியையும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவையும் சந்திக்கும்படி பிப்லப் குமாருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். இச்சந்திப்பின்போது, பிப்லப் குமாரை இருவரும் கண்டிப்பார்கள் என்றும் தெரிகிறது.
பாஜக தொடர்ந்து இது போன்ற சர்ச்சைக்குரிய பேச்சுகளில் சிக்கி வருகின்றது. இளைஞர்களின் வேலை வாய்ப்பு குறித்து முன்னதாக ஒரு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளிக்கையில், பிரதமர் மோடி இதே போன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். அதில் இளைஞர்கள் வேலைக் கிடைக்கவில்லை என்றால் பக்கோடா கடை போட்டு பிழைத்துக் கொள்ளலாம் என்று கூறியிடுந்தார். இவரைத் தொடர்ந்து பிப்லாப் குமார் தேப் பீடா கடை வைத்துப் பிழைக்க கூறியது மேலும் பாஜகவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.