Advertisment

ஒவ்வொரு குடும்பத்திலும் பயம்; பாஜக, ஆர்.எஸ்.எஸ் தலைவர்களிடமும் கவலைகள்; தற்காப்பில் அரசு

மூத்த மத்திய அமைச்சர்கள், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ல் உள்ள உயர் மட்ட நிர்வாகிகள் நாடு முழுவதும் அதிகரித்துவரும் 2வது தொற்று அலையின் சீற்றத்தில் தற்காப்பு குறித்து மக்களுடன் எவ்வாறு தொடர்புகொள்வது - அல்லது என்ன கூறுவது என்று உறுதியில்லாமல் இருக்கிறார்கள்.

author-image
WebDesk
New Update
Modi Government, Second covid wave, Fear in each family, பிரதமர் மோடி அரசு, கொரோனா வைரஸ், கோவிட் 19, கோவிட் இரண்டாவது அலை, தற்காப்பில் பாஜக, BJP on the defensive, பாஜக ஆர்எஸ்எஸ் கவலை, anxiety deepens within BJP and RSS leaders

2014 ஆம் ஆண்டு மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், முதல் முறையாக, மூத்த மத்திய அமைச்சர்கள், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ல் உள்ள உயர் மட்ட நிர்வாகிகள் நாடு முழுவதும் அதிகரித்துவரும் இரண்டாவது தொற்று அலையின் சீற்றத்தில் தற்காப்பு குறித்து மக்களுடன் எவ்வாறு தொடர்புகொள்வது - அல்லது என்ன கூறுவது என்று உறுதியாக தெரியாமல் இருக்கிறார்கள்.

Advertisment

இருப்பினும், ஒவ்வொரு குடும்பத்தையும் அச்சம் பீடித்துள்ளது என்பதில் ஒரு ஒருமித்த கருத்து உள்ளது. மேலும் சில உத்தரவாதங்களை உணர மக்கள் இன்னும் முயற்சியையும் சாதனைகளையும் காண வேண்டும். அந்த வகையில், கட்சியிலும், ஆர்.எஸ்.எஸ்-ஸிலும் அரசு தனது குழுமை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியத்தை யோசிக்கிறது. அதை விரைவில் அறிவிக்கக்கூடும்.

பதினைந்து நாட்களுக்குப் பிறகு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசின் பதிலாக தொற்று குறைவதற்கு அருகே உள்ளதாகக் கூறினார். அது ஒரு சில அறிகுறிகளைக் காட்டுகிறது. ஆக்ஸிஜன் தட்டுப்பாடு என்ற மிக முக்கியமான பிரச்சினையில், தொடர்ச்சியாக உயர் நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் மத்திய அரசை முடுக்கிவிட்டுள்ளன.

அதிகாரத் தளங்களில் உள்ளவர்களிடம் தேசிய பதற்றம் எவ்வாறு எதிரொலிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்காக சண்டே எக்ஸ்பிரஸ் சில மத்திய அமைச்சர்கள், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ல் உள்ள பல நிர்வாகிகளுடன் பேசியது.

இது திடீரென எதிர்பாராமல் ஏற்பட்டது என்பது திரும்பத் திரும்ப கூறப்படும் ஒரு பொதுவான கருத்து. பிப்ரவரி நடுப்பகுதியில் மும்பையில் இந்த போக்கு தொடங்கியது. ஆக்ஸிஜன் தேவை முதல் உருமாறிய கொரோனாவின் சாத்தியமான தாக்கங்கள் வரை - ஆரம்பத்திலேயே தெரியவந்தது. அரசாங்கத்திற்குத் தயாராக நேரம் இருந்தது ஆனால், ஒரே விஷயம் என்னவென்றால் இதுபோன்ற தீவிரமான அலையை யாரும் எதிர்பார்க்கவில்லை.

மத்திய அரசு நிலைமையை எவ்வாறு தவறாகப் புரிந்துகொண்டது என்பது பற்றி விவாதிக்க சிலர் தயாராக உள்ளனர். மேலும் கோவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற்றதற்காக பிரதமரை பாராட்டும் தீர்மானத்தை பாஜக நிறைவேற்றியது. உண்மையில், அவர்களில் பெரும்பாலோர் தலைமைத்துவத்தில் தவறுகளைக் கண்டுபிடிக்க இன்னும் தயக்கத்துடன் இருகிறார்கள். மேலும், சூழ்நிலையையை நிர்வகிக்க பிரதமரின் அவ்வளவு புலப்படாத முயற்சிகளுக்குப் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள்.

சில முதலமைச்சர்களின் தினசரி மற்றும் வழக்கமான பத்திரிகையாளர் சந்திப்புகளுடன் ஒப்பிடும்போது, ​​மேலேயுள்ள வெளிப்படையான மௌனம் குறித்து கேட்டதற்கு, ஒரு மத்திய அமைச்சர் கூறினார்: “அரசாங்கத்திடமிருந்து உறுதியளிக்கும் குரலின் தேவை குறித்து நான் உங்களுடன் இருக்கிறேன். முழு நிலைமையும் சவாலானது ” என்று கூறினார்.

“இந்த அலை நம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது” என்று மற்றொரு மத்திய அமைச்சர் கூறினார். “திடீரென்று, தொற்று எண்ணிக்கை உச்சத்திற்கு சென்றது” என்று மற்றொரு மத்திய அமைச்சர் ஒப்புக் கொண்டார். “நாடு முழுவதும் கிட்டத்தட்ட ஒவ்வொரு குடும்பத்திலும் அச்சம் பீடித்துள்ளது” என்று கூறினார்.

“இந்த சூழ்நிலைகளில், ஒவ்வொரு திட்டமும் விரைவாக விழுகிறது.”என்று நான்காவதாக ஒரு அமைச்சர் கூறினார். “முதல் அலைக்குப் பிறகு முகக் கவசம் அணியுங்கள், சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் என்று தொடர்ச்சியான வேண்டுகோள்களுக்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை” என்று அவர் கூறினார்.

இருப்பினும், “ஒவ்வொரு கொள்கையிலும் எங்களைத் தாக்கும் சில நபர்களால் மத்திய அரசாங்கத்தை அவதூறு செய்வதற்கான ஒரு அமைப்பாக்கப்பட்ட முயற்சி” இருப்பதாக அவர் கூறினார்.

ஒரு உயர் மட்ட அலுவலர் கூறுகையில், “கடந்த ஆண்டு, பொதுமுடக்கம் மிக மோசமான விஷயம் என்று அவர்கள் சொன்னார்கள். இப்போது நீங்கள் பொதுமுடக்கம் விதிக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். தடுப்பூசிகளை வெளிப்படையாக சந்தையில் வைத்து, அதை தனியார் துறைக்கு கொடுங்கள் என்றார்கள். இப்போது தடுப்பூசிகள் இலவசமாக கொடுக்க வேண்டும் என அவர்கள் கூறுகிறார்கள்.” என்று கூறினார்.

மற்றொரு அமைச்சர், பொதுமக்களை நம்பிக்கையுடன் கொண்டு செல்ல அரசாங்கத்திற்கு அதிக முயற்சி தேவை என்று ஆலோசனை கூறினார். “நமக்கு எதிரான மக்கள் எப்போதும் இருப்பார்கள். ஆனால், நியாயமான எண்ணம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். நேசிப்பவரின் பயம் மற்றும் இழப்பு யாரையும் கோபப்படுத்தக்கூடும். எல்லா விமர்சனங்களையும் உந்துதலாகக் பார்ப்பதற்கான நேரம் அல்ல இது. மக்களை நம்பிக்கையை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டும்” என்றார்.

ஆனால், ஒரு மூத்த அமைச்சர், பொதுமக்களுடன் தினசரி தொடர்புகொள்வது - அரசியல் மட்டத்தில் ஒரு மூத்த தலைவர்களுடன் தொடர்பு கொள்வவது - அவ்வளவு பயனுள்ளதாக இருக்காது என்று கூறினார். “பேச்சு மக்களை கோபப்படுத்தும்; அவர்கள் முடிவுகளை விரும்புகிறார்கள். ஒரு சொற்பொழிவை அல்ல” என்று அந்த அமைச்சர் கூறினார்.

அமைச்சர்கள் பாதுகாக்கப்படலாம். ஆனால் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ல் சில தலைவர்கள் இன்னும் வரவிருக்கிறார்கள்.

“அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், ஒரு உறுதியான அரசியல் செய்தியை வெளிப்படுத்துவதில் வீழ்ச்சியடைந்து வருகிறது” என்று ஒரு பாஜக தேசிய அலுவலக பொறுப்பாளர் கூறினார். மேலும், “முடிவுகளை வழங்க அரசாங்கம் தனது குழுவை புதுப்பிக்க வேண்டியிருக்கலாம்” என்று கூறினார்.

இருப்பினும், அந்த பாஜக நிர்வாகி, எங்கே பொறுப்பு இருக்கிறது என்ற கேள்விகளைத் தவிர்த்தார். ஒரு மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் மையப்படுத்தப்பட்ட முடிவெடுப்பது என்பது முன்கூட்டியே தடுப்பதற்காக அல்ல என்றும் இப்போது இரண்டாவது அலையை நிறுத்த வழிகளைத் தேடித் துருவிக் கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினார். “பிரதமர் அலுவலகம் அதிக மையப்படுத்தபட்டு உள்ளது. பிரதமர் பெறும் கருத்துகளின் தரத்தில் ஆழமான சிக்கல் உள்ளது. முதன்மை அறிவியல் ஆலோசகர் தான் இரண்டாவது அலைகளைப் பார்க்க இயலவில்லை என்று ஒப்புக் கொண்டார். பின்னர், மூன்றாவது அலை வரும் என்று கூறுகிறார்.” என்று விமசித்தார்.

இந்த சூழ்நிலையில், பொறுப்புக்கூறல் பற்றிய கேள்வியும் எழுப்பப்படுகிறது. தலைமையைச் சுற்றியுள்ள மக்களுக்கு எந்தவொரு பொறுப்புக்கூறல் அமைப்பு ஏதும் உள்ளதா … முதலிடத்தை (பிரதமரை) மகிழ்விக்கும் போக்கு இருப்பதாக நான் சந்தேகிக்கிறேன். எனவே, அவருக்கு எதிர்மறையான சூழ்நிலைகளை சரியான நேரத்தில் குறிப்பிட்டுக் காட்டுவதில்லை” என்று ஒரு ஆர்எஸ்எஸ் தலைவர் கூறினார்.

மேற்கு வங்கத் தேர்தல் தோல்வியும் இதை உறுதிபடுத்தியுள்ளது. “ஏப்ரல் 4 முதல் 15 வரை தொற்று பரவல் தொடங்கியபோது ​​கோவிட் தொற்று அதிகரிப்பு மிகவும் செங்குத்தாக உயர்ந்து வருவதை உணர்ந்த யாரும், வங்கத்தில் பொதுக்கூட்டத்தில் பதில் அளிக்கவில்லை. மாநிலத்தின் அரசியல் மனநிலை மற்றும் பொது சுகாதார சவால் இரண்டையும் நாம் தவறாகப் புரிந்துகொள்கிறோம்” என்று கூறினார்.

இருப்பினும், சூழ்நிலையை மீட்க மத்திய தலைமை கடுமையாக உழைத்து வருவதாக ஒரு பாஜக முதல்வர் கூறினார். “மார்ச் நடுப்பகுதியில் முதல்வர்களுக்கு பிரதமர் எச்சரித்தார். இது ஒரு எதிர்பாராத சூழ்நிலை, நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். நான் அழைக்கும்போதெல்லாம் அல்லது பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், உள்துறை அமைச்சர், ரயில்வே அமைச்சர் ஆகியோருடன் பேச விரும்பும்போது எல்லாம் ​​பதில் உடனடியாக அளிக்கப்பட்டுள்ளது” அந்த பாஜ்கா முதல்வர் கூறினார்.

மக்கள் கைவிடப்பட்ட உணர்வில் மனக்கசப்புடன் இருப்பது குறித்து கேட்டதற்கு, ஒரு மத்திய அமைச்சர் கூறுகையில், “இந்த மோசமான சூழ்நிலைகளில் ஆக்ஸிஜன் மற்றும் தடுப்பூசிகளை ஒரே இரவில் ஏற்பாடு செய்ய முடியாது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Bjp India Covid 19 Rss Second Wave
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment