நகர்புறங்களில் கொரோனா பொது முடக்கநிலையால் வேலையிழந்த தொழிலாளர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து இந்தியா அரசு பரிசீலித்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இத்திட்டம், அங்கீகரிக்கப்படும்போது, சிறிய நகர்புறங்களில் தொடங்கப்படலாம் என்றும் முதற்கட்டமாக சுமார் 350 பில்லியன் டாலர் (4.8 பில்லியன் டாலர்) செலவாகும் என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் இணை செயலாளர் சஞ்சய் குமார் தெரிவித்தார்.
Advertisment
"இத்தகைய யோசனையை கடந்த ஆண்டு முதல் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இருப்பினும், கொரோனா ஊரடங்கு யோசனை முன்னேறிச் செல்வதற்கான வாய்ப்பை வழங்கியது" என்று தெரிவித்தார்.
Advertisment
Advertisements
சட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியத் தொகை ஏப்ரல் 1ம் தேதி முதல் ரூ.20 உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இத்திட்டத்துக்கு முன்னெப்போதும் இல்லாத அளவில், இந்த நிதி ஆண்டில் ஒரு லட்சம் கோடியை மோடி அரசு ஒதுக்கியது.
ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான இந்தியாவில் கொரோன பெருந்தொற்று மிகப்பெரிய வரலாற்று சரிவை ஏற்படுத்தியது. நகர்புற மக்களின் பொருளாதார பாதிப்பை இத்திட்டம் மென்மையாக்கும் என்று தெரிவித்தார்.
பெரு நகரங்களில் மேற்கொள்ளும் ஸ்மார்ட் சிட்டி போன்ற திட்டங்களுக்கு தொழில்முறை நிபுணத்துவம் தேவைப்படுவதால், வேலை வாய்ப்பு திட்டத்தை சிறிய நகர்புறங்களில் தொடங்குவது குறித்து பரிசீலித்து வருவதாகவும் குமார் தெரிவித்தார்.
ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், கிராமங்களில் சாலைகள் அமைத்தல், பாசனக் கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளைத் தூர்வாருதல், காடுகளை வளர்த்தல் போன்ற உள்ளூர் பொதுப்பணித் திட்டங்களுக்கு மக்கள் பணி அமர்த்தப்பட்டனர். இது இப்போது 270 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பலனடைந்து வருகின்றனர். மேலும், கொரோனா ஊரடங்கால், சொந்த ஊர்களுக்கு திரும்பிய புலம் பெயர்த் தொழிலாளர்களை பாதுகாக்கும் ஒரு கருவியாகவும் இத்திட்டம் பயன்பட்டது.
121 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் ஏப்ரல் மாதத்தில் வேலை இழந்தது என்றும், வேலையின்மை விகிதம் 23 விழுக்காடாக உயர்ந்தது என்றும் சென்டர் ஃபார் மானிட்டரிங் இந்தியன் எகானமி எனும் நிறுவனம் தெரிவித்தது. எவ்வாரயினும், தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மீண்டும் பொருளாதார நடவடிக்கை முடிக்கி விடப்பட்டுள்ள நிலையில், வேலையின்மை விகிதம் வீழ்ச்சியடையத் தொடங்கியது.
இத்திட்டம் மக்களின் தேவைகளை அதிகரிக்கும் என்று மும்பை இந்திரா காந்தி மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியரும், மோடியின் ஆலோசகருமான அஷிமா கோயல் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil