Advertisment

விவசாயிகள் போராட்ட விவகாரம்: மோடி 3.0 அரசின் மாறுபட்ட அணுகுமுறை

மோடி 3.0 அரசு, விவசாயிகள் போராட்டத்தில் தற்போது ஈடுபாடு காண்பிக்காமல் இருக்கிறது. குறிப்பாக, 2020-21 ஆம் ஆண்டு காலகட்டங்களை விட தற்போது மிதமான நிலைப்பாட்டை மத்திய அரசு கையாள்கிறது.

author-image
WebDesk
New Update
Farmers protest

"உச்சநீதிமன்றத்தில் இந்த விவகாரம் உள்ளது. நீதிமன்றம் வழிகாட்டும் நெறிமுறைகளை நாங்கள் பின்பற்றுவோம்" - போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படுவார்களா என மத்திய வேளாண்மை துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானிடம் கேள்வி எழுப்பியதற்கு, அவர் இவ்வாறு பதிலளித்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பஞ்சாப்-ஹரியானா எல்லையில் உள்ள ஷம்புவில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Why Modi govt 3.0 is maintaining an arm’s length from protesting farmers

 

Advertisment
Advertisement

சம்யுக்த கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகியவற்றின் தலைமையில் தொடரும் விவசாயிகளின் போராட்டங்கள் குறித்த கேள்விகளுக்கு சவுகான் எச்சரிக்கையாக பதிலளித்தார். இதன் மூலம் விவசாயிகளின் போராட்டம் தொடர்பான தங்கள் அணுகுமுறையை அரசு மாற்றியமைத்துள்ளது தெரிய வருகிறது. கடந்த முறையை போன்றல்லாமல், தற்போதைய மோடி அரசு விவசாயிகள் போராட்டத்தில் இருந்து விலகியே இருக்கிறது.

கடந்த 2.0 மோடி அரசில் இருந்து மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராடி வருகின்றனர். அப்போதைய மத்திய வேளாண்மை துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளடக்கிய அமைச்சர்கள் குழுவினர், போராட்டக்காரர்களுடன் 11 கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குறிப்பாக, அக்டோபர் 14, 2020-ல் இருந்து ஜனவரி 22, 2021 வரை இந்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. குறிப்பாக, டிசம்பர் 8, 2020 அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், வேளாண் சங்க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி தொடக்கத்தில், விவசாயிகள் டெல்லி நுழைவு போராட்டத்திற்கு அறிவிப்பு விடுத்த போதும், மத்திய அரசு குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் விவசாய கடன் தள்ளுபடி போன்றவற்றுக்கு போராடி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு பல பேச்சுவார்த்தைகளை நடத்தியது.

சவுகன், தனது பங்கிற்கு ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். இதன் ஒரு பகுதியாக பஞ்சாப் அமைச்சர் குர்மீத் சிங்குடன் சேர்ந்த்து மாநில வேளாண் துறை அமைச்சர்களுடன் சவுகன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால், தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் எந்தவொரு கூட்டமும் நடத்தப்படவில்லை.

அக்டோபர் 14, 2020 அன்று கிருஷி பவனில் முதல் கட்ட கூட்டத்தை நடத்துவதற்காக 29 விவசாய சங்கங்களை டெல்லிக்கு அழைத்த அப்போதைய விவசாயச் செயலர் சஞ்சய் அகர்வாலின் நடவடிக்கை, சச்சரவுகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக அவர்களின் எதிர்ப்பைத் தூண்டுவதற்கு வழிவகுத்தது என்று அரசாங்கம் கருதுகிறது. வேளாண் துறை அமைச்சர் தோமர் ஆஜராகக் கோரி விவசாயத் தலைவர்கள் கூட்டத்திலிருந்து வெளியேறியதால்  சலசலப்பு ஏற்பட்டது. அவர்கள் கிருஷி பவனுக்கு வெளியே மூன்று மசோதாக்களின் நகல்களைக் கிழித்து முழக்கங்களை எழுப்பினர். 

நவம்பர் 26, 2020 அன்று விவசாயிகள் டெல்லிக்கு அணிவகுப்பைத் தொடங்கியதால், அது ஒரு நீண்ட போராட்டத்தின் தொடக்கமாக இருந்தது. அதன்பிறகு, 2021 ஜனவரி 22 வரை, அரசுக்கும் விவசாய சங்கங்களுக்கும் இடையே மேலும் 10 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. ஆனால், இந்த பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை. விவசாயிகள் டெல்லி எல்லையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜனவரி 12, 2021 அன்று, உச்ச நீதிமன்றம் விவசாயச் சட்டங்களைச் செயல்படுத்துவதைத் தடுத்து நிறுத்தி, அது குறித்து விவாதிக்க நான்கு பேர் கொண்ட குழுவை அமைக்கும் உத்தரவை நிறைவேற்றியது. குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான, பாரதிய கிசான் யூனியன் மற்றும் அகில இந்திய கிசான் ஒருங்கிணைப்புக் குழுவின் தேசியத் தலைவரான பூபிந்தர் சிங் மான், அதன் கூட்டங்களில் இருந்து விலகினார். மற்ற மூன்று உறுப்பினர்கள், இது குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

இறுதியில், நவம்பர் 19, 2021 அன்று குருநானக் தேவ் ஜெயந்தியின் போது, ​​பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்தார்.

சம்யுக்த கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகியவை பிப்ரவரி 13, 2024 முதல் ஷம்பு மற்றும் கானௌரி எல்லைகளில் முகாமிட்டுள்ளன, ஹரியானா காவல்துறை அவர்களின் “டில்லி சலோ” அணிவகுப்பைத் தடுத்து நிறுத்தியது.

இந்த முறை விவசாயிகள் போராட்டத்தை கையாள்வதில் மத்திய அரசு மாறுபட்ட அணுகுமுறை கையாள்வதற்கு பல காரணங்கள் இருக்கலாம். தற்போது நடைபெறும் போராட்டம் பஞ்சாப்-ஹரியானா எல்லையில் மட்டுமே உள்ளது. புவியியல் ரீதியாக பார்த்தால் 2020-21 போராட்டம் போன்று இது பரந்து காணப்படவில்லை. மேலும், சில விவசாய அமைப்புகள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. 2020-21-ல் நடைபெற்ற போராட்டம், நேரடியாக மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து அமைந்தது. தற்போதைய போராட்டம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடக்கிறது. இவை மத்திய அரசின் மாறுபட்ட அணுகுமுறைக்கு காரணங்களாக இருக்கலாம்.

- Harikishan Sharma

Central Government Farmers Protest In Delhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment